இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டாமல் இருக்க முடியாது... Description: இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டாமல் இருக்க முடியாது...

இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டாமல் இருக்க முடியாது...


இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி...இவரை பாராட்டாமல் இருக்க முடியாது...

காவலர்கள் என்றாலே கெட்டவர்கள் என்பது பலருக்கும் ஆழ்மனதில் படிந்திருக்கும் விசயம். காரணம் பொதுமக்கள் உடன் அவர்களது அணுகுமுறை தான். அத்தி பூத்தார் போல் சிலர் காவல்துறை பணியில் இருப்பார்கள். அப்படி ஒருவரைப் பற்றிய பதிவு தான் இது...

தேசிய நெடுஞ்சாலை அது. சர் சர் என காற்றை கிழித்துக் கொண்டு விரைவு காட்டுகின்றன வாகனங்கள். நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், டூரிஷ்ட் வாகனங்கள், அரசு பேருந்துகள் என வரிசையாக பயணித்துக் கொண்டிருக்கின்றன.

அந்த சாலையில் தெருநாய் ஒன்று அடிபட்டு செத்துப் போய் கிடக்கிறது. வாகனம் இடித்த வேகத்தில் அதன் உடல் உறுப்புக்கள் சிதைந்து அகோரமாக காட்சி அளித்தது. அந்த பகுதி வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இதைப் பார்த்ததும் முகம் சுழித்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் மூக்கைப் பிடித்துக் கொண்டே சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த காவல்துறை அதிகாரி இதைப் பார்த்தார். உடனே எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவரே களத்தில் இறங்கினார். அந்த பகுதியில் ஒட்டப்பட்டிருந்த ஒரு அரசியல்கட்சியின் கிழிந்த போஷ்டரை எடுத்து வந்தவர் நாயின் சிதைந்த பகுதிகளை அவரே அதில் வழித்து, துடைத்து எடுத்தார்.

இதில் எந்த ஈகோவும் பார்க்காமல் இரண்டாவது முறை தரையையும் துடைத்து எடுத்தார். பொதுமக்களுக்கு செத்துக் கிடந்த நாய் இடையூறு ஏற்படுத்தியதால் இப்ப்டி ஒரு முயற்சியில் இறங்கி இருக்கிறார் இந்த காவலர்.

இதை அப்பகுதிவாசி ஒருவர் படம் பிடித்துப் போட அது வைரல் ஆகி வருகிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்னும் வாசகம் இப்ப்டியான காவலர்களால் தான் இன்னும் நீடித்து இருக்கிறது... நீங்களே வீடீயோ பாருங்கள்... தெரியும்


நண்பர்களுடன் பகிர :