தாய்பாலை விட தூய்மையான காதல்...நெஞ்சை உருக்கும் நிஜகதை... உயிரையே கொடுத்து நிரூபித்த இளைஞன்.. Description: தாய்பாலை விட தூய்மையான காதல்...நெஞ்சை உருக்கும் நிஜகதை... உயிரையே கொடுத்து நிரூபித்த இளைஞன்..

தாய்பாலை விட தூய்மையான காதல்...நெஞ்சை உருக்கும் நிஜகதை... உயிரையே கொடுத்து நிரூபித்த இளைஞன்..


தாய்பாலை விட தூய்மையான காதல்...நெஞ்சை உருக்கும் நிஜகதை... உயிரையே கொடுத்து நிரூபித்த இளைஞன்..

காதல் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட விசயம். அது எப்போது யாருக்கு யார் மீது வரும் என்றே கணிக்க முடியாதது. இங்கு ஒரு இனைஞனும் காதல் வயப்பட்டார். அந்த காதலுக்காக தன் உயிரையே கொடுத்து உள்ளார்.

நம் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவம் தான் இது. கிராமத்து அழகு, பட்டணத்து அறிவு என மிளிரிய இளம் பெண் ஒருவரைக் கண்டதும் காதல் வயப்பட்டார் அந்த இளைஞர். தினமும் அந்த பெண்ணின் பின்னாலேயே சுற்றி வந்தார். இதைப் பார்த்த அந்த பெண் திடீரென அவனை நெருங்கிப் பேசினார்.

நீ எனது பின்னாலேயே வருகிறாய். என் மீது காதல் வயப்பட்டு இருப்பது தெரிகிறது. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நீ இன்று முதல் சரியாக ஒரு மாதத்துக்கு என்னை பார்க்காமலும், என்னிடம் பேசாமலும் இருக்க வேண்டும். அதை நீ செய்து விட்டால் நானும் உன்னை காதல் செய்கிறேன்... என சொன்னாள்.

இளைஞன் அதை வேதவாக்காக எடுத்துக் கொண்டான். ஒரு மாதம் அவளை பார்க்கப் போகவே இல்லை. ஒரு மாதம் கழித்து கையில் ப்ரோபஷ் செய்ய ரோஜா பூ, கடிதத்தோடு இளைஞன் சென்றான். ஆனால் அன்று அந்த பெண் இறந்து இருந்தார். அவர் கையில் ஒரு கடிதம் இருந்தது.பெண்ணின் உறவினர்கள் மூலம் அந்த கடிதம் இளைஞன் கைக்கு வந்தது. அந்த பெண் புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிர் இழந்திருந்தார்.

அந்த பெண் எழுதியிருந்த கடிதத்தில் உன்னால் என்னிடம் பேசாமலும், பார்க்காமலும் இருக்க முடியுமென நீ நிரூபித்து விட்டாய். இனி வரும் காலத்திலும் நீ இதேபோல் வாழ்ந்துவிடு...நானும் உன்னை நேசித்தேன்..என அதில் எழுதியிருந்தது.

இதைப்படித்த இளைஞன் உடைந்து உருகி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவர் புரபோஷ் செய்ய கொண்டு வந்த கடிதத்தை எடுத்து உறவினர்கள் வாசித்தனர். அந்த கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா? மேலே படியுங்கள்..

உன்னை காதலித்த பிறகு நான் அறிந்து கொண்டேன். ஒரு மாதம் தான் நீ உயிர் வாழ்வாய் என்று! அதனால் தான் என் வாழ்நாளையும் ஒரு மாதமாக முடித்துக் கொண்டேன். ஒரு மாதமாய் உன்னை பார்க்காமல் இருந்தது உன் காதலுக்கு நான் கொடுத்த மரியாதை. தற்போது உன் அருகில் அமைதியாகவும், என் ஆழமான காதலுடனும் உறங்க வருகிறேன்.. என எழுதியிருந்தது.

இந்த ஆதர்ச காதல் தம்பதியினரின் வாழ்வில் நடந்த சோகம் லைலா- மஜ்னு போல் காதல் வரலாற்றிலும் அவர்கள் பெயரை நிற்க செய்துவிட்டது


நண்பர்களுடன் பகிர :