தேநீர் விற்பவருக்கு தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது... இவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. Description: தேநீர் விற்பவருக்கு தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது... இவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

தேநீர் விற்பவருக்கு தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது... இவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


தேநீர் விற்பவருக்கு தேடி வந்த பத்ம ஸ்ரீ விருது...  இவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

எளிய மக்களிடம் தான் வாழ்வியல் கதைகளும் அதிகம் இருக்கும். அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு அறிவித்த் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வாகி இருக்கிறார் ஒரு டீக்கடைக்காரர்.

அப்படி இவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.ஓடிசா மாநிலம் தேவரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்பிரகாஷ் ராவ். அப்பகுதியில் தேநீர் விற்பனையகத்தை இவர் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கிடைக்க என்ன காரணம்?

பிரகாஷ்ராவ் தனது டீக்கடை வருமானம் முழுவதையும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கே பயன்படுத்தி வருகிறார். இதற்கென இவர் நடத்தும் பள்ளியில் 80 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.தினசரி காலையில் 4 மணிக்கு திறக்கும் இவரது கடை, காலை 10 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதுவரை கிடைத்த வருமானத்தோடு பள்ளிக்கு செல்கிறார்.

பிரகாஷ்ராவ் குடும்ப கஷ்டத்தினால் படிப்பை பாதியில் விட்டுவிட்டு டீக்கடை போட்டவர் ஆவார். இவர் முதலில் படிப்பையும், டீக்கடையையும் சேர்த்தே பார்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் தந்தையின் உடல்நலக்குறைவினால் படிப்பை முற்றாக நிறுத்தி விட்டு முழு நேரமும் டீக்கடை தொழிலுக்கே வந்துவிட்டார். ஆனாலும் படிப்பின் மீதான ஆர்வம் மட்டும் அவருக்கு குறையவே இல்லை.

அப்போது தான் அவர் தேநீர் கடை நடத்தும் சேரி பகுதியில் பல குழந்தைகள் போடிய கல்வி இல்லாமல் இருப்பது அவருக்குத் தெரிந்தது. உடனே,ஆஷா ஓ ஆஷ்வாஷானா என்ற பெயரில் பள்ளியைத் துவங்கினார். முதலில் இந்த பள்ளிக்கூடம் மூன்றாம் வகுப்பு வரை மட்டும் இயங்கியது. அதன் பின்னர் இவர்களை அரசுப்பள்ளியில் அவரே சேர்த்து விட்டார்.

இதுபோக இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் சேவை மையம் ஒன்றும் இலவசமாக நடத்தி வருகிறார். இடன் மூலம் ரத்தம் தேவைப்படும் பலருக்கும், ரத்தக்கொடையாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தார். இவரது சேவை குறித்து பிரதமர் மோடியே முன்பு ஒருமுறை மனதின் குரல் என்னும் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நண்பர்களுடன் பகிர :