முனியாண்டி விலாஸ் குடும்பத்தின் தெறிக்க விடும் விழா.. 2 டன் ஆடு, 2 டன் கோழிக்கறி விருந்து...படிச்சா அசத்து போவீங்க... Description: முனியாண்டி விலாஸ் குடும்பத்தின் தெறிக்க விடும் விழா.. 2 டன் ஆடு, 2 டன் கோழிக்கறி விருந்து...படிச்சா அசத்து போவீங்க...

முனியாண்டி விலாஸ் குடும்பத்தின் தெறிக்க விடும் விழா.. 2 டன் ஆடு, 2 டன் கோழிக்கறி விருந்து...படிச்சா அசத்து போவீங்க...


முனியாண்டி விலாஸ் குடும்பத்தின் தெறிக்க விடும் விழா.. 2 டன் ஆடு, 2 டன் கோழிக்கறி விருந்து...படிச்சா அசத்து போவீங்க...

உங்க ஊர்ல முனியாண்டி விலாஸ் இருக்கா? உங்க ஊரை மாதிரியே தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் முனியாண்டி விலாஸ் இருக்கு. சிங்காரச் சென்னையில் மட்டும் முனியாண்டி விலாஸ்க்கு 40க்கு மேல கிளைகள் இருக்கு. ஏன் பாரினிலும் கூட முனியாண்டி விலாஸ் இருக்கு. இதுக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைக் கதை இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க தொடர்ந்து படிங்க...

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கு கள்ளிக்குடி வடக்கம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் முனியாண்டி சுவாமி கோயில் இருக்கு. இந்த ஊரில் ஒரு சமயம் கடும் பஞ்சம் ஏற்பட்டு, விவசாயம் பொய்த்து போயிடுச்சு. ஊரே வறுமையில் விழுந்துடுச்சு. அப்போ அந்த ஊரில் இருந்த சுப்பா நாயுடு என்பவரது கனவில் முனியாண்டி சாமி வந்துள்ளார். என் பெயரில் குறைவான கட்டணத்தில், மக்களுக்கு வயிறார சாப்பாடு போடுன்னு முனியசாமி சொல்லியிருக்காரு.

உடனே சுப்பாநாயுடும் காரைக்குடிக்கு போய் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் போட, பணம் கொட்டோ, கொட்டுன்னு கொட்டிருக்கு. உடனே இதை அப்படியே வடக்கம்பட்டி மொத்த ஊருக்கும் சொல்ல, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்ல போய் கடை போட்டாங்க. பிரான்ஸ், கனடா, துபாய், சீனா நாடுகளில் கூட இப்போ முனியாண்டி விலாஸ் இருக்கு. ஆனா உலகம் முழுவதுக்கும் உள்ள முனியாண்டி விலாஸ் நடத்துபவர்கள் அனைவருமே ‘வடக்கம்பட்டி’ மக்கள் தான்.

இப்போதும் முனியாண்டி விலாஸ்களில் முதல் பில் வடக்கம்பட்டி முனியசாமிக்குத் தான். அதை ஆண்டு முழுசும் சேர்த்து வைப்பாங்க. ஒவ்வொரு வருசமும் தை மாசம் இரண்டாவது வியாழக் கிழமை முதல் சனிக்கிழமை வரை கடைக்கு லீவு விட்டுட்டு நேரே வடக்கம்பட்டி முனியசாமி கோயிலுக்கு வந்துடுவாங்க. அங்க 3 நாளு கறிவிருந்து, சோறுன்னு அமர்க்களப்படும். முனியாண்டி விலாஸ் குடும்பத்துக்குள்ள கல்யாண சம்பந்தமும் இந்த நாளில் தான் பேசி முடிப்பார்களாம்.

கடந்த வாரம் நடந்த இந்த விழாவில் 2000 கிலோ ஆடு, 2000 கிலோ கோழியில் பிரமாண்ட விருந்து வைச்சு சுத்துபட்டு கிராம மக்களை அசத்தியிருக்கிறார்கள்.

பின்னே, முனியாண்டி விலாஸ்ன்னா சும்மாவா?


நண்பர்களுடன் பகிர :