வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி பாணியில் ஒரு ரியல் சம்பவம்...கோவில்பட்டியில் ஊருணியை காணாமாம்... Description: வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி பாணியில் ஒரு ரியல் சம்பவம்...கோவில்பட்டியில் ஊருணியை காணாமாம்...

வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி பாணியில் ஒரு ரியல் சம்பவம்...கோவில்பட்டியில் ஊருணியை காணாமாம்...


வடிவேலுவின் கிணத்தைக் காணோம் காமெடி பாணியில்   ஒரு ரியல் சம்பவம்...கோவில்பட்டியில் ஊருணியை காணாமாம்...

வைகைப்புயல் வடிவேலு கிணத்தைக் காணோம் என இல்லாத கிணற்றுக்கு போலீஸாரை திகிலில் ஆழ்த்துவார். அந்த காமெடிக்கு மொத்த தமிழகமும் அதிர்ந்து சிரித்தது. அதேபோல் ஒரு சம்பவம் கோவில்பட்டியில் நிகழ்ந்துள்ளது.

கோவில்பட்டி அருகே பழைய அய்யனேரியை சேர்ந்தவர் சீத்தாராமன். தமிழக அரசு வினியோகித்த விலையில்லா ஆடுகள் தனக்கு ஏன் வழங்கப்படவில்லை என இவர் பழைய அய்யனேரி ஊராட்சிக்கு சென்றார். அதற்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் பயனாளியாக உள்ளவர்களுக்குத் தான் விலைவில்லா வெள்ளாடு விநியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்.

அப்போது அதே திட்டத்தின் கீழ் ருத்தரப்ப நாயக்கர் ஊரணியையும் சீரமைத்ததாக ஊராட்சி நிர்வாகம் தெரிவிக்க, அப்படியொரு ஊரணியே தனக்குத் தெரியாதே என சீத்தாராமன் அதைத் தேடத் துவங்கினார். இதுதொடர்பாக அவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலும் கேட்டார். அப்போது பழைய அப்பனேரி கிராமத்தின் தென் பகுதியில் அது இருப்பதாக அதிகாரிகள் தகவல் சொன்னார்கள். ஆனால் அங்கு அப்படியொரு ஊரணி இல்லை.

ஆனாலும் சீதாராமன் தொடர்ந்து குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒதுகுறித்துக் கேட்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 314 நாள்கள் அங்கு வேலை நடந்ததாகவும், 58 ஆயிரம் இதற்கு ஊதியமாக கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சீதாராமன் ஊருணியின் வரைபடம் கேட்டு கோவில்பட்டி வட்டாட்சியருக்கு விண்ணபித்தார். அப்போது அப்பட்டி ஊருணியே இல்லை என கோவில்பட்டி வட்டாட்சியர் கடிதம் கொடுத்துள்ளார். இல்லாத ஊருணிக்கு தான் இத்தனை வேலையா? என சிரிப்பாய் சிரிக்கிறார்கள் கோவில்பட்டி மக்கள்.


நண்பர்களுடன் பகிர :