நான்கு வயதில் நடிப்பு...22 ஆண்டுகள் கழித்து கைபிடிப்பு ஒரு சுவாரஸ்ய சம்பவம்.. Description: நான்கு வயதில் நடிப்பு...22 ஆண்டுகள் கழித்து கைபிடிப்பு ஒரு சுவாரஸ்ய சம்பவம்..

நான்கு வயதில் நடிப்பு...22 ஆண்டுகள் கழித்து கைபிடிப்பு ஒரு சுவாரஸ்ய சம்பவம்..


நான்கு வயதில் நடிப்பு...22 ஆண்டுகள் கழித்து கைபிடிப்பு           ஒரு சுவாரஸ்ய சம்பவம்..

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். எப்போது, யாருக்கு யார் மீது காதல் வரும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் இங்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடக மேடையில் ஒன்றாக நடித்த ஜோடி, இப்போது ரியலில் கைப்பிடித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியர்களாக பணி புரிந்த இருவர் ஒரே மாதத்தில் குழந்தை பெற்றனர். நண்பர்களான இருவரும் தங்களது குழந்தைகளுக்கு ஸ்ரீராம், ஆர்ய ஸ்ரீ என பெயர் சூட்டி அன்பு மழை பொழிந்து வளர்த்து வந்தனர்.

இவர்களது நான்காவது வயதில் இருவரையும் ‘’ஒரு ராணுவவீரரின் திருமண்ம்’’ என்னும் நாடகத்தில் கணவர், மனைவியாக நடிக்க வைத்துள்ளனர். ஆண்டுகள் சென்றது. ஸ்ரீராம் ராணுவ அதிகாரி பணிக்கு தேர்வெழுதி ராணுவ அதிகாரியும் ஆகிவிட்டார். ஆர்ய ஸ்ரீ மருத்துவம் படித்துள்ளார்.

இந்நிலையி;ல் ஸ்ரீராம் நாடகத்தில் நடித்த தங்கள் பழைய போட்டோவை தேடி எடுத்து, ஆர்ய ஸ்ரீயை தொடர்பு கொண்டு நாம் ஏன் இப்போது திருமணம் செய்து கொள்ளக் கூடாது எனக் கேட்டுள்ளார். அவரும் சம்மதிக்க, இரு வீட்டார் சம்மதத்துடன் கைப்பிடித்துள்ளது இந்த ஜோடி!


நண்பர்களுடன் பகிர :