இப்படியும் ஒரு கண்டக்டர்... வீடீயோ பாருங்க பாராட்டாமல் இருக்க மாட்டீங்க... Description: இப்படியும் ஒரு கண்டக்டர்... வீடீயோ பாருங்க பாராட்டாமல் இருக்க மாட்டீங்க...

இப்படியும் ஒரு கண்டக்டர்... வீடீயோ பாருங்க பாராட்டாமல் இருக்க மாட்டீங்க...


இப்படியும் ஒரு கண்டக்டர்... வீடீயோ பாருங்க பாராட்டாமல் இருக்க மாட்டீங்க...

ஏறி வாயா...ஏறி வாயா என படியில் இருந்து ஏறும் முன்னரே கடுப்பு காட்டும் பல நடந்துனர்களை பார்த்திருக்கிறோம். இன்னும் சிலர் சில்லரை கொண்டு வரவில்லை என்றால் ஏண்டா பேருந்தில் ஏறினோம் என நினைக்க வைக்கும் அளவுக்கு நச்சரித்து விடுவார்கள்.

இங்கு ஒரு நடத்துனரை பாருங்கள். அசத்து போவீர்கள். மதுரையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் பேருந்து அது. பயணிகள் ஏறி அமர்ந்து உள்ளனர். வண்டி புறப்பட்ட சில நிமிடங்களில் நடத்துனர் செய்வது தான் அசத்தல் ரகம்.

அந்த பேருந்தின் நடத்துனர் பொதுக்கூட்ட மேடையில் பேசுபவர்களைப் போல மொத்த பயணிகளுக்கு மத்தியில் பேச ஆரம்பிக்கிறார். ‘’இது உங்க பேருந்து சுத்தமாக வைச்சுக்க உதவுங்க. வாமிட் யாருக்காவது வருவது மாதிரி இருந்துச்சுன்னா சொல்லுங்க கேரி பேக் கொடுக்குறேன். அதை வாங்கி பயன்படுத்திக்கங்க. புளிப்பு மிட்டாய் கொடுக்கிறேன். வாங்கி பயன்படுத்திக்கங்க. அதே போல பயணக்கட்டணத்தை தெரிஞ்சுக்கங்க என பேசத் துவங்குபவர் ஒட்டன் சத்திரத்துக்கு 82 ரூபாய், தாராபுரத்துக்கு 115 ரூபாய், சூளூர் 161 ரூபாய், கோயம்புத்தூர் 170 ரூபாய்...முடிந்த அளவுக்கு சில்லரையா கொடுத்து உங்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு உதவும்மாறு கேட்டுக்கிறேன் என்றவர் பயணிகளைப் பார்த்து கையெடுத்து கும்பிடுகிறார்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்தோடு பயணம் செய்வீங்க...உங்களது பயணம் வெற்றிகரமாகவும், இனியதாகவும் அமைய தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கோயம்புத்தூர் கோட்டம் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.”என ஓடும் பேருந்தில் இருந்து அவர் டிக்கெட் கொடுக்கும் முன்னர் பேச அது தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்!


நண்பர்களுடன் பகிர :