பிறந்த வீடு டூ புகுந்த வீடு... திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெஞ்சுருக்கும் காட்சிகள் Description: பிறந்த வீடு டூ புகுந்த வீடு... திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெஞ்சுருக்கும் காட்சிகள்

பிறந்த வீடு டூ புகுந்த வீடு... திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெஞ்சுருக்கும் காட்சிகள்


பிறந்த வீடு டூ புகுந்த வீடு...   திருமணவீட்டில் கேட்ச் செய்யபட்ட நெஞ்சுருக்கும் காட்சிகள்

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். ஆயிரம் காலத்து பயிரான திருமணம் இரு மனங்கள் மட்டும் இணையும் விழா அல்ல. இரு குடும்பங்களின் சங்கமம் அது.





பெண் என்பவள் முதலில் பெற்றோருக்கு குழந்தையாகிறாள். பருவம் எய்தியதும் கன்னிப்பெண் என்னும் தகுதியை அடைகிறாள். திருமணம் முடிந்த உடன் மனைவி என்னும் ஸ்தானத்துக்கு வருகிறாள். தாய்மை அடையும் போது கர்ப்பிணி என்றும், குழந்தை பேறுக்கு பின்னர் அன்னை என்றும் தன் வாழ்நாளில் பல படிகளையும் கடந்து செல்பவள் பெண்.

ஆண்களை விட பல மடங்கு மனோதிடம் கொண்டவர்கள் பெண்கள். ஆம்...உங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்து பாரினுக்கும், வெளியூர்களுக்கும் வேலைக்கு சென்ற நபர்களை நினைத்துப் பாருங்கள். அவர்களில் பலரும் உணவு பிடிக்கவில்லை. அங்கு சூழல் சரியில்லை என திரும்பி வந்திருப்பார்கள். இப்போது ஒரு பெண்ணை நினைத்துப் பாருங்கள். உணவு, வாழ்சூழல் என அனைத்திலும் முற்றாக மாறுபட்ட ஒரு குடும்பத்துக்குள் சங்கமிக்கிறாள் பெண். ஆனால் பெண் அந்த வாழ்சூழலுக்குள் வாழ பழகிக் கொள்கிறாள். உணவு கலாச்சாரத்துக்கு புகுந்த வீட்டுக்கு ஏற்ப மாறிக் கொள்வதோடு, அவளே அமைத்து அந்த கலாச்சார உணவை பந்தியும் வைக்கிறாள்.





பெண் குழந்தைகள் வீட்டின் செல்வங்கள். அதனால் தான் இந்த பெண் குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்யும் போது, இன்னொரு வீட்டுக்கு வாழச் செல்லும் பெண்ணை மகாலெட்சுமியாக வைத்து கொண்டாடுவார்கள். அண்ணன், தம்பி என உடன்பிறப்புகளோடு பிறந்த பெண்ணாகட்டும், அல்லது அம்மா, அப்பாக்களின் செல்லமான பெண்ணாகட்டும் தங்கள் திருமணத்தின் போது பிரிவின் துயர் தாங்காமல் அழுது விடுவார்கள். காலையில் திருமணத்தின் போது சிரித்த முகத்தோடு போஸ் கொடுக்கும் பெண்களை, மாலையில் பார்த்தால் நேரம் செல்லச் செல்ல அவர்களின் முகம் மாறத் துவங்கி இருக்கும். பிரிவின் துயர் துரத்தும்.





இதோ இங்கே சில திருமண வீட்டில் அப்படி பிறந்த வீட்டில் இருந்து, புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களின் ரியாக்சன் கேட்ச் செய்யப்பட்டுள்ளது. நம்மையும் மீறி அழுக வைக்கும் பாசப்போராட்ட வீடீயோவை இங்கே பாருங்கள்...


நண்பர்களுடன் பகிர :