வந்தாச்சு இயற்கை நாப்கின்...அசரவைத்த ஆய்வு மாணவி... மஞ்சள், வேம்பு, வெட்டி வேர் தான் மூலப்பொருள்.. Description: வந்தாச்சு இயற்கை நாப்கின்...அசரவைத்த ஆய்வு மாணவி... மஞ்சள், வேம்பு, வெட்டி வேர் தான் மூலப்பொருள்..

வந்தாச்சு இயற்கை நாப்கின்...அசரவைத்த ஆய்வு மாணவி... மஞ்சள், வேம்பு, வெட்டி வேர் தான் மூலப்பொருள்..


வந்தாச்சு இயற்கை நாப்கின்...அசரவைத்த ஆய்வு மாணவி... மஞ்சள், வேம்பு, வெட்டி வேர் தான் மூலப்பொருள்..

அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவி ப்ரீத்தி ராமதாஸ், இவர் முற்றாக பிளாஸ்டிக்கே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர், எலுமிச்சையின் மூலம் இயற்கை நாப்கினை கண்டுபிடித்துள்ளார்.

இந்த இயற்கை நாப்கின்கள் தயாரிப்பு குறித்து மாணவி ப்ரீத்தி கூறுகையில்,’’இவை செல்லோஸை அடிப்படையாகக் கொண்டவை. இது மஞ்சள், வேம்பு, வெட்டிவேர், எழுமிச்சை ஆகியவற்றின் சாறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நாப்கின்கள் பயன்பாட்டுக்கு பின்னர் தூக்கி வீசப்பட்டாலும் ஒரு மாதத்தில் மட்கி விடும். பெண்களை பெரிதும் அச்சுறுத்தும் பாக்டீரியா நோய்தொற்றை ஏற்படுத்தும் நோய்கிருமிகளுக்கு எதிராகவும் இது செயல் புரிகிறது.

பார்ப்பதற்கு மிக எளிதாக இருக்கும் இந்த நாப்கின் 3 மி.மீ தடிமன் கொண்டது. அதேநேரம் தனது எடையைக் காட்டிலும் 1.700 சதவிகிதம் நீரை உறிஞ்சும். இந்த நாப்கினில் தாவரங்களின் மூலம் கிடைக்கும் பாலிமர்கள் மற்றும் கார்போஹைட்ரேட்கள் இந்த நாப்கினில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உடலுக்கும் எவ்வித கெடுதலும் இந்த நாப்கின்கள் ஏற்படுத்துவது இல்லை.

பொதுவாக தற்போது சந்தைகளில் புளக்கத்தில் இருக்கும் நாப்கினில் பிளாஸ்டிக் இருக்கும். அதனால் அவை மட்க நீண்ட காலம் ஆகும். காகித கழ்வான செல்லுலோஸ் கூழும் இருக்கும். கூடவே அதனை வெள்ளையாக்க குளோரின் பயன்படுத்துவார்கள். அது நச்சுத்தன்மையையும் வெளியிடும். இது அதிலிருந்து மாறுபட்டு ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கும்.

சின்ன வயதில் இருந்தே எனக்கு இயற்கையின் மீது ஆர்வம் அதிகம். அதனால் தான் ஆய்வு மாணவியாக என் கண்டுபிடிப்புகள் சமூகத்துக்காக இருக்க வேண்டும். அதிலும் பெண்களுக்காக இருக்க வேண்டும். என இந்த இயற்கை நாப்கினை செய்தேன்.”என்றார் அவர்.


நண்பர்களுடன் பகிர :