அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...! Description: அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...!

அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...!


அமெரிக்காவில் தமிழ்மொழிக்கு கிடைத்த பெருமை... ஜனவரி மாதத்தை தமிழ்ப் பண்பாட்டு மாதமாக அறிவிப்பு...!

தற்போது நடப்பில் ஓடிக் கொண்டு இருக்கும் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அறிவித்துள்ளது. நம்மூர் தமிழர்களே தாய்மொழியை பேசத் தயங்கும் நிலையில் அன்னைத் தமிழுக்கு இந்த உயரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு தமிழ்ச்சங்கமும் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள தமிழ் சங்கத்தினர் இந்த மாதமான ஜனவரியை தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற கரோலினா மாநில அரசு இந்த ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டு மாதமாக அறிவித்துள்ளது.

அந்த மாநிலத்தின் ஆளுநர் ராய் கூப்பர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’உலகில் நெடுங்காலமாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வரும் மொழிகளுல் தமிழ்’’என சிலாகித்துள்ளார்.

அதைவிட ஹைலெட் தங்கள் மாநில வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணிகளை தமிழர்கள் செய்திருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :