என் பொண்டாட்டியை கொல்லணும்..லீவு தாங்க... விநோதமாக லீவு கேட்டு கடிதம் எழுதிய பேங்க் மேனேஜர் Description: என் பொண்டாட்டியை கொல்லணும்..லீவு தாங்க... விநோதமாக லீவு கேட்டு கடிதம் எழுதிய பேங்க் மேனேஜர்

என் பொண்டாட்டியை கொல்லணும்..லீவு தாங்க... விநோதமாக லீவு கேட்டு கடிதம் எழுதிய பேங்க் மேனேஜர்


என் பொண்டாட்டியை கொல்லணும்..லீவு தாங்க...  விநோதமாக லீவு கேட்டு  கடிதம் எழுதிய பேங்க் மேனேஜர்

கல்யாணம், இறந்தவீடு, நிச்சயதார்த்தம், கிரகப்பிரவேசம் என பல விசயங்களுக்காக லீவு கேட்கும் பலரைப் பார்த்திருப்போம். இங்கு ஒருவர் என் பொண்டாட்டியை கொலை செய்யணும். இரண்டுநாள்கள் லீவு தாங்க என அசால்டாக கேட்க வியர்த்து கொட்டிவிட்டது உயர் அதிகாரிகளுக்கு!

பீகார் மாநிலம் பக்ஸர் பகுதியை சேர்ந்தவர் முன்னா பிரசாத். நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார். இவரது மனைவி சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார். மனைவியை கவனித்துக் கொள்வதற்காக முன்னா அடிக்கடி லீவு போட்டார். இந்நிலையில் அண்மையில் மீண்டும் லீவு கேட்க, உயர் அதிகாரிகள் டார்கெட்டைக் காரணம் காட்டி லீவுக்கு மறுத்திருக்கின்றனர்.

இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளானார் முன்னா. உடனே அவர் என்னுடைய மனைவியை கொலை செய்து, அவரது உடலை அடக்கமும் செய்ய வேண்டி இருப்பதால் இரண்டு நாள்கள் லீவு தேவை என வங்கி உயர் அதிகாரிகளுக்கு மட்டுமல்லாது, பிரதமர், ஜனாதிபதி அலுவலகங்களுக்கும் அந்த விடுப்பு கடிதத்தை அனுப்பி வைத்து விட்டார். இந்நிலையில் இதைப் பார்த்த அதிகாரிகள் அரண்டு போய் எத்தனை நாள் வேண்டுமானாலும் லீவு எடுத்துக்கங்க...”என உடைந்து விட்டனர்.

உடல் நிலை சரியில்லாத மனைவியை உடன் இருந்து பார்க்க லீவு கொடுக்காத மனவருத்தத்தில் தான் அப்படி கடிதம் எழுதியதாக விளக்கம் அளித்துள்ளார் முன்னா...

ஆனாலும் உங்க ஐடியா செம அண்ணா...


நண்பர்களுடன் பகிர :