உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி Description: உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி

உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி


உடல் சூட்டைத் தணிக்க இதை செய்ங்க போது.. இரண்டே நிமிடத்தில் இனிய தீர்வுக்கு சித்தர்கள் காட்டிய வழி

சிலரது உடல் இயல்பாகவே சூடாகவே இருக்கும். அவர்கள் மேல் கைவைத்தாலே கொதிப்பதைக் காண முடியும். சிலருக்கு தொடர்ச்சியாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதாலும் உடல் சூடு அதிகமாகி கண் எரிச்சல் உண்டாகும். அதிலும் ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு இன்னும் அதிகமாகக் காணப்படும்.

உடல்சூட்டினால் தான் முகப்பரு, தோல்வியாதி, வயிற்றுவலி, எடை குறைதல், தலைமுடி உதிர்தல் உள்பட பல பிரச்னைகள் உருவாகின்றன. இதனை தவிர்க்க அலோபதி மருத்துவரைத் தேடி ஓட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. சித்தர்கள் இதை தவிர்க்க அற்புதமான ஆலோசனைகளை கூறியுள்ளனர். வெறும் இரண்டே நிமிடத்தில் இதைச் செய்து விடலாம்.

நல்லெண்ணெய், பூண்டு, மிளகு ஆகியவையே இதற்குத் தேவை. முதலில் நல்லெண்ணெயை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டைப் போட்டு சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். சூடு ஆறியதும் எண்ணெயை இரு கால்களின் பெருவிரல் எனப்படும் கட்டைவிரல் நகத்தில் மட்டும் பூசிவிட வேண்டும். இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவ வேண்டும். இதை செய்யும் போதே உடலில் சூடு தணிந்திருக்கும். முக்கியமாக இதை இரண்டு நிமிடங்களுக்கு மேல் உடலில் வைத்திருக்கக் கூடாது.

சளி, காய்ச்சல் நேரத்தில் இம்முயற்சியில் ஈடுபடக் கூடாது. மிகுந்த மன அழுத்தம், உடல் உஷ்ணம் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக இருக்கும். இதை பெரியவர்கள் தினசரி 2 நிமிடமும், சிறியவர்கள் வாரத்துக்கு இருமுறையும் செய்யலாம். நீண்டதூர பயணத்தினால் உண்டான சூட்டையும் இது ஓடவிட்டு விடும். குளிப்பதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்னர் இதைச் செய்தாலே போதும். அப்புறமென்ன நீங்களும் உங்க சூட்டை இப்படி தணிச்சுருங்க....

வீடியோ செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. பார்த்து பயனடையுங்கள்.


நண்பர்களுடன் பகிர :