கடையில் இட்லி மாவு வாங்குபவர்களா நீங்கள்? இத மொதல்ல பாருங்க.. Description: கடையில் இட்லி மாவு வாங்குபவர்களா நீங்கள்? இத மொதல்ல பாருங்க..

கடையில் இட்லி மாவு வாங்குபவர்களா நீங்கள்? இத மொதல்ல பாருங்க..


 கடையில் இட்லி மாவு வாங்குபவர்களா நீங்கள்? இத மொதல்ல பாருங்க..

கணவன், மனைவி என இருவருமே வேலைக்குச் செல்லும் குடும்பங்களின் ஆபத்தாந்தவன் இட்லி மாவு கடைகள் தான். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் இட்லி மாவுகலை வாங்கி அவசரக்கோலத்தில் இட்லி, தோசை என செய்து தான் அவர்களின் பொழுதுகள் கழியும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இட்லி மாவு பாக்கெட் கடைகள் இல்லையென்றால் அவர்களின் உணவு எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று சொன்னால் அது மிகையல்ல.

இட்லி மாவு பாக்கெட் வியாபாரம் பல நூறு குடும்பங்களை ஓசையின்றி வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இட்லி தோசை மாவு பாக்கெட்டுகள் ஒரு உயிர்கொல்லி என்பது பலரும் அறியாத விஷயம். இதன் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை.

இந்த விடியோவை பாருங்கள் உங்களுக்கே புரியும்.

இந்த இட்லி மாவில் ஆறுநாள்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க காயம், புண் ஆகியவற்றுக்கும் கேரம் போர்டு விளையாட போடும் போரிக் ஆசிட், அரோட் ஆகியவற்றை மாவில் கலந்து விற்கின்றனர். தினசரி 12 மணி நேரம் வரை விற்பனைக்காக கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருப்பதால் அந்த கல்லும் கொஞ்சம், கொஞ்சமாக தேய்ந்து மாவுடன் கலந்து விடுகிறது. இவர்கள் சேர்க்கும் சோடா உப்பு, அஜினமோட்டோ ஆகியவற்றால் சிறுநீரகக் கல்லும் ஏற்படுகிறது. என்ன தான் நல்ல உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீரை இதற்கு பயன்படுத்துவதில்லை.

நம் வீட்டில் மாவு அரைக்கும் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போதே ஒரு கை வெந்தயத்தையும் போட்டு அரைப்பார்கள். இந்த வெந்தயம் ஒரு சிறந்த இயற்கை நிவாரணி. இது உடல் உஷ்ணம், வாய் துர்நாற்றம் , குடல்புண் ஆகியவற்றையும் குணமாக்கும். கடைமாவில் வெந்தயத்தை சேர்ப்பது இல்ல. ஈ கோலி பாக்டீரியாக்கள் கடை மாவில் உருவாகும் வாய்ப்பும் அதிகம்.

கலப்படம் இல்லாமல், நம் உடல் உழைப்பை செலுத்தி இதைத் தவிர்க்க நாமே மாவு அரைக்கலாம். அல்லது, நன்கு தெரிந்த நல்ல நேர்மையான நபர்களிடம் இருந்து மாவு வாங்கலாம். இனி கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள்...


நண்பர்களுடன் பகிர :