சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால்.... இது எச்சரிக்கைப் பதிவு Description: சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால்.... இது எச்சரிக்கைப் பதிவு

சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால்.... இது எச்சரிக்கைப் பதிவு


சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்காவிட்டால்.... இது எச்சரிக்கைப் பதிவு

உலக அளவில் நம்முடைய இந்தியாவில் தான் அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கணையத்தின் செயல்பாடே நம் உடலிக் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. இன்சுலின் சுரப்பில் உள்ள குறைபாடு தான் சர்க்கரை நோய் வருவதற்கான அடிப்படை காரணம்.

உடல் பருமனும், அதிக ரத்தக் கொழுப்பும் நீரிழிவு ஏற்பட காரணமாக அமைகிறது. உடலின் எடை அதிகரிக்க, அதிகரிக்க இன்சுலின் தேவையும் அதிகரிக்கும். இதனால் கணையம் அடிக்கடி இன்சுலின் சுரந்து கலைத்து போய்விடும். இதனால் தான் அதிக பருமனாக இருக்கும் பலரும் சர்க்கரை நோயால் தவிப்பதை பார்க்கிறோம்.

இதேபோல் உடல்திசு க்களில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேரும்போது இன்சுலினால் செல்களுக்கு உள்ளே நுழைய முடியாது. அப்படியே சிரமப்பட்டு திசுக்களின் உள்ளே இன்சுலின் போனாலும் கொழுப்பு அடைத்துக் கொள்வதால் இன்சுலின் தன் பணியை செய்ய முடியாது. இதனாலும் நீரழிவு ஏற்படும். சிலருக்கு பரம்பரை ஜீன் காரணமாக சர்க்கரை நோய் வந்து விடுகிறது.

மகப்பேறு காலத்தில் சில பெண்களுக்கு நீரிழிவு நோய் வரும்ம் இது குழந்தை பிறப்புக்கு பின்னர் சரியாகிவிடும். முறையான சிகிட்சை பெற வில்லை என்றால் சர்க்கரை நோயால் கண்கள், இதயம், சிறுநீரகம், பாதம் ஆகியவை பாதிக்கப்படும்.

இதைத் தடுக்க பாதங்களின் உணர்வு தன்மையை அவ்வப்போது சோதிக்க வேண்டும். பாதத்தில் உணர்வு குறைபாட்டை உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீரிழிவுக் குறைபாடு உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தாலே சர்க்கரை நோயின் பின் விளைவுகள் அனைத்தையும் முற்றாக தவிர்த்து விடலாம்..


நண்பர்களுடன் பகிர :