நாக்கை பிடுங்குவது போல் கேள்வி கேட்கும் இளைஞர். போராடும் ஆசிரியர்களை கிழி, கிழி என கிழித்து தொங்கவிடும் வீடீயோ...

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பல பதிவுகளையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை கிழித்து தொங்க விடும் வீடியோ சமூக வளைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் பேசுவது இதுதான்.

வணக்கம்...டீச்சர்கள், வாத்தியார்களுக்காகவே நான் இதை ஷேர் பண்றேன். இந்த சம்பளம் பத்தல...அடுத்த ஜென்ரேசனுக்காக போராடுறார்ன்னு போராடுறீங்களே...சம்பளம் பத்தலன்னு தானே போராடுறீக? அதுல ஒரு ஹை.எம் அம்மா போய் கேட்குது. போராட வராட்டாலும் பரவாயில்ல. வீட்ல இருங்கன்னு...உனக்கு ஏன் இந்த வேலை. நீ போராடாட்டா வீட்ல இரு. எத்தனை பேரு ராணுவத்துல இருக்கான் தெரியுமா? 2006க்கு அப்புறம் எத்தனை பேருக்கு பென்சல் இல்லன்னு தெரியுமா?
அவன், அவன் குடும்பத்தை விட்டு பார்டரில் போய் போராடுறான். எப்போ சாவான்னே தெரியாம உங்களுக்கு தானே உழைக்கிறான். தனியார் பள்ளிக் கூடத்துல எவ்வளவு சம்பளம் கொடுக்குறான்? அவன் குடும்பம் ரன்னாகாம இருக்கா? நீட் தேர்வால அனிதா செத்தப்போ எந்த டீச்சர் இறங்கி போராடுனீங்க? நீட்ட்க்கு எதிரா ஏன் போராடல? எந்த பிள்ளைகளுக்காக இப்போ போராடுறீக? சம்பளம் பத்தலைன்னா வேலையை விடுங்க.
உங்களையெல்லாம் தெருவுல விடணும். என் கூட பிறந்ததும் டீச்சர் தான். பத்தாயிரம் தான் தனியார் பள்ளிக்கு சம்பளம் கொடுங்காங்க தெரியுமா? ஒரு டாய்லெட் வசதி இல்லன்னு ஸ்டூடண்ட்ஸ்காக என்னிக்காவது போராடி இருக்கீங்களா? பிள்ளைகளுக்கு பாத்ரூம் இல்ல..சேர் இல்ல. அதுக்கு கேட்க மாட்டுகீக...எவ்வளவு தான் சம்பளம் வேணும்? சப்போர்ட் கேட்குறீக. எதாவது அசிங்கமா திட்டிபுடுவேன். முதலிலேயே கவர்மெண்ட் வேலை வேணாமுன்னு சொல்லிருக்கணும். கணக்கெடுப்பு, ரேசன்கார்டுன்னு எல்லா பணிக்கும் ஒத்துகிட்டுத் தானே வேலைக்கு வந்தீக?

நீங்க எத்தனை பிள்ளைகளை கவர்மெண்ட் ஸ்கூலில் படிக்க வைக்குறீக? ஒருநாள் ராணுவம் போராடுனா நீங்க பிச்சை தான் எடுக்கணும். கொடுக்க சம்பளம் வேணாம்ன்னு ரிசைன் பண்ணுங்க. அனிதா பொண்ணு செத்தப்போ ஒரே ஒரு டீச்சர் தான் வேலையை ரிசைன் பண்ணுச்சு. அது சொல்லலாங்க. வேலை வேணாமுன்னு. “ன்னு கிழி, கிழி என கிழித்து தொங்க விட்டிருக்கிறார் அந்த இளைஞர்.
அட வீடீயோ வடிவில் பாருங்க...மனிதர் பொங்கித் தள்ளி இருக்கிறார்.