ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க.. Description: ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..

ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..


 ஸ்கூலுக்கு ஏன் வந்தீங்க? ஆசிரியர்களுக்கு வகுப்பெடுத்த தலைமையாசிரியை  அதீத சம்பளம் தான் எனவும் ஒப்புதல்: வீடியோ பாருங்க..

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பலதரப்பிலும் குற்றச்சாட்டு ஒலிக்கிறது.

இந்நிலையில் ஒரு பள்ளியில் மட்டும் மொத்த ஆசிரியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு வந்தனர். இதுகுறித்து கேள்விப்பட்டதும், போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த பெண் தலைமையாசிரியை ஒருவர் அவர்கள் அனைவரையும் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் பேசினார். அவரது அந்த உரை சமூக வளைதளங்களிலும் வெளியாக அது இப்போது செம வைரல்.

பெண் புரட்சியாளராகவே மாறிய அந்த பெண் தல்ஐமையாசிரியை அப்படி என்ன பேசினார்? இனி அவரது பேச்சு..’’ எந்த நம்பிக்கையில் யார் காப்பாற்றுவார் என இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க. நான் ஒரு தலைமையாசிரியை தான். அதுக்கு முன்னால நான் ஒரு டீச்சர். பதவி, வேலை, பொருளாதாரச்சூழல் பற்றிய பயமே இல்லையா? யாருடைய பதவியும், சம்பளமும் நிரந்தரம் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி உங்களால் இப்படி போராடும் இத்தனை பேருக்கு துரோகம் செய்து விட்டு ஸ்கூலில் வந்து உட்கார முடிகிறது? அதீதமான சம்பளம் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையை உங்களுக்கு கொடுத்திருக்கிறது என்பது இப்போது புரிகிறது.

தலைமுறை பெரிய பாதிப்பில் இருக்கிறது. அடுத்துவரும் தலைமுறைக்கு வேலையே கிடையாது. அவன் இருக்குற போஸ்டிங்கெல்லாம் தூக்கி காலி பண்ணிட்டு இருக்கான். கூலா உட்கார்ந்துட்டு இருக்கோம் நாம். தயவு செய்து போராட்டத்துக்கு வர்றீங்களோ, மறியலுக்கு வர்றீங்களோ அதைப் பத்தி வேண்டாம். அதுக்குன்னு சிலர் நேர்ந்து விட்ட மாதிரி இருப்பாங்க எப்பவுமே...நீங்க பள்ளிக்கு வராமலாச்சும் இருக்க முயற்சி பண்ணுங்க. தயவு செய்து வராதீங்க.

பணிக்கு வராவிட்டால் என்ன செய்து யாரும் நம் தலையில் இருந்தெல்லாம் கிரீடத்தை எடுக்கப் போவதில்லை. மிஞ்சிப் போன நாலு நாள் சம்பளம் பிடிப்பார்கள். அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படுவதற்கு நாலு நாள் சம்பளத்தை தூக்கி எரிஞ்சுட்டு போகலாம். நூறு சதவிகிதமான வெற்றி நம்மால் கொடுக்க முடியுமா? முடியா? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீங்களே மாற்றத்துக்கு தயாராக இல்லாத போது, உங்களுக்கு அடுத்துவரும் தலைமுறையை எப்படி மாற்றப் போகிறீர்கள்? ” எனக் கேட்டு அவர்களை வகுப்புக்கு வராமல் ஆக்குகிறார்.

மேயுற மாட்டையும் கெடுக்கிறயே என்னும் புகழ் பெற்ற பழமொழி கொண்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்...


நண்பர்களுடன் பகிர :

J
Jaya 1வருடத்திற்கு முன்
Antha headmaster mam panathu 100% correct.....nama oor makkal elame easy nu nenaikren ga....inga ethuvume poradama kedaikuthu...