5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்... எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் சமூகம். Description: 5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்... எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் சமூகம்.

5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்... எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் சமூகம்.


5 வயது மகளை கிணற்றில் தள்ளி கொன்ற தாய்... எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் சமூகம்.

ஒரு பிரியாணிக் கடை பையனின் மீதான கள்ளக்காதலால் தன் இரு பிள்ளைகளையே கொன்ற அபிராமி இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த சோக வடு மறைவதற்குள் அதே போல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. தனது கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தான் பெற்ற ஐந்து வயது மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்திருக்கிறார் ஒரு கொடூர தாய்!

சேலம் மாவட்டம், வீரவனூர் அருகே இலுப்புநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர். இவரது மனைவி பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஷிவானி என ஐந்து வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிப்போய் பார்த்தனர். அப்போது அதில் பிரியங்காவும், அவரது மகள் ஷிவானியும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதில் ஷிவானி பிணமாகவே மீட்கப்பட்டார்.பிரியங்கா காப்பாற்றப்பட்டார்.

இதுபற்றி நடந்த போலீஸ் விசாரணையின் போது மர்மநபர்கள் சிலர் தன்னிடம் பணம், நகைகளைபறிக்க வந்ததாகவும் அப்போது தன்னையும், மகளையும் உள்ளே தள்ளிவிட்டு சென்று விட்டதாகவும் வாக்குமூலம் கொடுத்தார் பிரியங்கா. ஆனால் இதில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிரியங்காவின் தகவல்கள் முன்னுக்கு பின் முரணாக இருக்கவே அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பிரியங்கா கூறிய பதில் அதிர்ச்சி ரகம்.

‘’என்னோட கணவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். நானும், குழந்தையும் இங்கே வீட்டில் தனியாக இருப்பதால் எனக்கு பல ஆண்களோடு தொடர்பு ஏற்பட்டது. இதை என் குழந்தை என் கணவரிடம் போனில் பேசும்போது சொல்லிவிட்டாள். அவர் செய்வது அறியாது சொன்னாலும் வளர, வளர என் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருப்பாள் என்பதால் கிணற்றில் தள்ளிவிட்டேன். இரவே மகளை தள்ளிவிட்டு விட்டு காலையில் நானும் குதித்து, சப்தமிட்டு நாடகம் ஆடினேன்.”என சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து பிரியங்காவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்கே சென்று கொண்டிருக்கிறது நம் தமிழ்ச் சமூகம்?


நண்பர்களுடன் பகிர :

S
Surekha 1வருடத்திற்கு முன்
Serupala adikanum