பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்... Description: பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்...

பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்...


பனிக்கால சருமநோய்களைத் தடுக்க இதைச் செய்ங்க போதும்...

பனிக்காலத்தில் தான் நம் சருமம் பலவகையான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. என்ன தான் குளித்து எடுத்து நறுமணத் திரவங்கள் பூசி வெளியில் சென்றாலும் பனி நம் சருமத்தை பாடாய் படுத்திவிடும்.

சிலருக்கு பனிக்காலத்தில் கை, கால்களில் வெள்ளை திட்டுக்கள் தெரியும். உடலின் தோல் பகுதிகளில் சரும வறட்சி ஏற்படும். சிலருக்கு சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் தெரியும். இவற்றை சமாளிக்க வீட்டில் இருக்கும் சில பொருட்களே போதும்.

முதலில் பனிக்காலம் ஏன் சருமச் சிக்கலை உருவாக்குகிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம். பனிக்காலத்தில் காற்றில் இருக்கும் அதிகமான ஈரப்பதம், நம் சருமத்தின் எண்ணெய்ப் பசையை உலரச் செய்துவிடும். அதனால் தான் சருமம் சுருங்கி விடுகிறது. இதைத் தவிர்க்க தினசரி குளிப்பதற்கு முன்னர் முகம், கை, கால் ஆகிய பகுதிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வேகமாக சூடு பறக்கத் தேய்க்க வேண்டும்.

இந்த தேங்காய் எண்ணெய் நம் உடலில் பத்து நிமிடங்கள் ஊற வேண்டும். அதன் பின்னர் குளித்துப் பாருங்கள். இந்த சரும வெள்ளைத்திட்டு பறந்துவிடும். இதை தினசரி செய்ய முடியாதவர்கள் வாரத்துக்கு இருமுறை நல்லெண்ணெய்யை தலை முதல் கால் வரை தடவி அரை மணிநேரம் ஊறவிட்டு, பச்சை பயிறு மாவால் தேய்த்துக் குளிக்கலாம்.

இதேபோல் குளித்து முடித்ததும் உடம்பில் இருக்கும் ஈரத்தை முழுமையாகத் துடைக்காமல் தேங்காய் எண்ணெயையை விரல்களால் தொட்டு எடுத்து உடல் முழுக்க தடவலாம். அல்லது உடலின் எந்த பகுதி வறண்டு போகிறதோ அங்கு மட்டும் தடவலாம். இதையெல்லாம் செஞ்சு பாருங்க அப்புறம் சரும வறட்சிக்கு குட்பை சொல்லிவிடலாம்.மேலும் தோல் வறட்சி நீக்கி மென்மையாக வெள்ளையாக மாற கிழே உள்ள மருத்துவ குறிப்பை பாருங்கள் .


நண்பர்களுடன் பகிர :