திருமணத்துக்கு மாட்டு வண்டியில் வந்த மணமக்கள் காரணம் என்னன்னு தெரியுமா? Description: திருமணத்துக்கு மாட்டு வண்டியில் வந்த மணமக்கள் காரணம் என்னன்னு தெரியுமா?

திருமணத்துக்கு மாட்டு வண்டியில் வந்த மணமக்கள் காரணம் என்னன்னு தெரியுமா?


திருமணத்துக்கு மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்    காரணம் என்னன்னு தெரியுமா?

திருமணத்து வித, விதமான காரில் வரும் மணமக்களை பார்த்திருப்போம். குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த திருமணம் ஒன்றில் மணமக்கள் மாட்டு வண்டியில் வந்து அசத்தினர். அதற்கான காரணம் என்னன்னு தெரியுமா?

குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள வகுத்தான்விளையைச் சேர்ந்தவர் பொன் ஷோஜின்ராஜ். இவர் சவுதி அரேபியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திக்கணங்கோடு ஆசிரியை பெனிற்றாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் புதுமணத் தம்பதிகள் கருங்கலில் உள்ள மணமகன் வீட்டிற்கு வந்தனர்.

அங்கிருந்து மாலையில் கருங்கல் கருமாவிளையில் உள்ள திருமண மண்டபத்துக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்காக 2 காளை மாடுகள் பூட்டிய ரெட்டை காளை மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றனர். இதனை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

பாரம்பர்யத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்நிகழ்வு குறித்து மணமகன் தந்தை ராஜா நம்மிடம் பேசினார். அப்போது அவர், ‘’எரிவாய் பொருட்களின் விலை தினமும் கூடிக் கொண்டே இருக்கிறது. இதே நிலை நீடிக்குமேயானால் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியதைப் போல மாட்டு வண்டியில் பயணம் செய்யும் நிலை ஏற்படும். அதனை சிம்பாளிக்கா பொதுமக்களுக்கு உணர்த்தவே இப்படி செய்தோம்.”என்கிறார்.


நண்பர்களுடன் பகிர :