பயிற்சி..நாட்டுக்கு சேவை...முடிவில் கொலை! இந்திய ராணுவத்தில் நாய்களின் நிலை இதுதான்: காரணம் தெரியுமா? Description: பயிற்சி..நாட்டுக்கு சேவை...முடிவில் கொலை! இந்திய ராணுவத்தில் நாய்களின் நிலை இதுதான்: காரணம் தெரியுமா?

பயிற்சி..நாட்டுக்கு சேவை...முடிவில் கொலை! இந்திய ராணுவத்தில் நாய்களின் நிலை இதுதான்: காரணம் தெரியுமா?


பயிற்சி..நாட்டுக்கு சேவை...முடிவில் கொலை!    இந்திய ராணுவத்தில் நாய்களின் நிலை இதுதான்: காரணம் தெரியுமா?

ஒரு ரகசியமான தகவலை உங்களிடம் உங்கள் நண்பர் சொல்லிவிட்டு யாரிடமும் சொல்லி விடாதே என்று சொன்னால், உடனே நீங்கள் என்ன சொல்வீர்கள் ‘’இது என்ன ராணுவ ரகசியமா?”என நகைச்சுவையாய் சொல்வீர்கள். ராணுவத்தில் ரகசியத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. அந்த ராணுவத்தில் ரகசியமாக நடக்கும் ஒரு விசயம் பற்றியே இந்த பதிவு...

ராணுவத்தில் இளம் பிராயத்தில் தேர்வாகுபவர்கள் முதல் 15 ஆண்டுகள் பணி செய்வது கட்டாயம். அதன் பின்னர் தன் விருப்பத்தின் பேரில் பணியில் தொடரவோ, பணியில் இருந்து ஓய்வு பெறவோ முடியும். இப்படி ஓய்வு பெறுபவர்கள் அதன் பின்னர் போட்டித் தேர்வுகளில் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் அரசு பணிக்கும் செல்ல முடியும். அதேநேரம் ராணுவத்தில் இருக்கும் கால்நடைகளின் நிலை என்ன தெரியுமா?

இந்திய ராணுவத்தில் குதிரைகளும் கூட உள்ளன. அவை ஓய்வு பெறுகையிலும், வயது மூப்பு எய்கையிலும் கூட இப்படித்தான் கொல்லப்படுகின்றன. இதேபோல் ராணுவத்தில் இருந்து ஓய்வு, வயது மூப்பு அடைந்த நாய்களும் கூட கொல்லப்படவே செய்கின்றன. இதில் ஒரே ஆறுதல் இந்த மிருகங்கள் வலியில்லாமல் கொல்லப்படுகின்றன.

ஏன் இப்படி? அந்த ஜீவன்கள் உயிர் வாழ்ந்தால் தான் என்ன? இதுகுறித்து கிடைத்த தகவல்கள் ஆச்சர்ய ரகம். ‘’பொதுவாகவே இந்திய ராணுவத்திற்கு லேப்ரடர்ஸ்ம் ஜெர்மன் ஷெப்பர்ட், பெல்ஜியன் ஷெப்பர்ட் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. காரணம் இந்த நாய்களுக்கு மோப்பசக்தியும் அதிகம். அதிலும் போதிய பயிற்சி எடுத்துக்கொள்ளும் நாய்கள் ராணுவத்தில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ராணுவத்தில் நாய்களுக்கு பலவித பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. வெடிகுண்டு கண்டுபிடிப்பது, காலாட்படை ரோந்து, போரில் காயம்பட்ட வீரர்களை கண்டுபிடிப்பது என முக்கிய பயிற்சிகள் பெற்றும் தேச நலனுக்கு உழைக்கின்றன.

அதேநேரம் ஓய்வு, வயதுமூப்பினால் ராணுவத்தில் இருந்து வெளியேற்றப்படும் இந்த நாய்கள் தேசவிரோதிகள் கையில் சிக்கினால் அதை தீயசக்திக்கு பயன்படுத்தும் அபாயம் இருக்கிறது. இதனாலேயே இந்த நாய்களை கொலை செய்து விடுகின்றனர். இவ்வாறு கொலை செய்யப்படும் நாய்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றன.

ஆனால், இந்த நாய்களை ஒரு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கி, ராணுவமே பராமரிக்கலாம். ஆனால் அது சாத்தியம் இல்லாதது. அடுத்தடுத்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் போது இவைகளின் நிலை அவைகளுக்கு வினோதமாகத் தெரியும். மேலும் அதை பராமரிப்பவர் எப்போதும் விழிப்புடன் இருப்பார் என்றும் சொல்லிவிட முடியாது தானே?

ஒரு தோட்டம் நிறைய பூக்கள் பூக்கிறது. சில பூக்கள் ஆலயத்துக்கு கடவுள் விக்கிரகங்களுக்குச் செல்லும். சில பூக்கள் இறந்தவர்களின் மேல் மாலையாகச் செல்லும். அதே போலத்தான் தன்னுடைய பிறப்பை தேசத்துக்காக அர்ப்பணித்து, தேச நலனே லட்சியமாய் வாழ்ந்து மறையும் இந்த நாய்...நம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் இன்னொரு தாய்!


நண்பர்களுடன் பகிர :

S
Selva 1வருடத்திற்கு முன்
Very Bad
J
J Antony 1வருடத்திற்கு முன்
இதே அடிப்படையில்தானே, ஐய்யா அப்துல் கலாமையும், செல்வி ஜெயலலிதாவையும் பிஜேபி அரசானது படுகொலை செய்தது???!!!...