வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ Description: வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ

வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ


வகுப்பறையில் ஆசிரியர் செய்த மிக மோசமான செயல் - வைரலாகும் வீடியோ

சென்னை கொருக்குப்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் வகுப்பறையில் மாணவர்கள் பயிலும் போது ஒரு கையில் நாயைப் பிடித்ததும் மற்றொரு கையில் செல்போனை பார்த்தப்படியும் அமர்ந்திருக்கும் ஆசிரியர் குறித்து ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழக அரசு உதவியுடன் ஆர்.ஜே.ஆர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். கடந்த சில நாள்களுக்கு முன் பள்ளிக்கு நாயுடன் வந்த ஆசிரியர் ஜெயந்தி, வகுப்பறைக்குச் சென்றுள்ளார். மாணவர்கள் படித்து கொண்டிருக்கும்போது , இருக்கையில் அமர்ந்தப்படி ஒருகையில் செல்போனையும் மற்றொரு கையில் தான் அழைத்து வந்த நாயையும் பிடித்தபடி வகுப்பறையில் இருந்துள்ளார்.இதனால் மாணவ மாணவிகள் சிறிது அச்சம் அடைந்தனர்.

இதுகுறித்து புகார் வட்டார கல்வி அலுவலர்க்கு சென்றது.அதற்க்கு அவர், ஏற்கெனவே அதுதொடர்பான தகவல் எங்களுக்குக் கிடைத்து அவரை எச்சரித்து இருக்கிறோம், இந்தப்பள்ளி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு பள்ளிக்குச் சென்று மீண்டும் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதன் வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :