தலைப்பு கொடுங்க அங்கிள்..நாங்க பேசறோம்! அசரவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை Description: தலைப்பு கொடுங்க அங்கிள்..நாங்க பேசறோம்! அசரவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை

தலைப்பு கொடுங்க அங்கிள்..நாங்க பேசறோம்! அசரவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை


தலைப்பு கொடுங்க அங்கிள்..நாங்க பேசறோம்!     அசரவைக்கும் அரசுப் பள்ளி ஆசிரியரின் சாதனை

அரசுப் பள்ளிகள் என்றாலே நமக்குள் ஒரு முகம் சுழிப்பு ஒளிந்திருக்கும். பல ஆயிரம் சம்பளங்கள் வாங்கும் அரசு அதிகாரிகளும் தங்கள் பிள்ளைகளை பிரைவேட் பள்ளிகளிலேயே படிக்க வைக்கின்றனர். ஆனால் பல திறமைகளை தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போதிய வாய்ப்பும் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்க்கைக்கான வாசலை திறந்து வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்து உள்ளது சந்திரபிள்ளை வலசு கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியராக இருப்பவர் சிவகுமார். இவர் தான் தன்னிடம் பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களை தலைப்பு கொடுத்து ஆங்கிலத்தில் பேச விட்டுள்ளார். பார்க்கும் போது பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் தெரியும் அந்த மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பும், அவர்களின் முயற்சியின் பலனாக தொடர்ச்சியாக பேசுவதும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணிக்கு மகுடம் சூட்டியுள்ளது.

சிவக்குமார் தன் மாணவர்களின் ஆங்கில உரையை தனது பேஸ்புக் பக்கத்தில் போட, அது டிரெண்டியானது. இதுகுறித்து சிவக்குமார் என்ன சொல்கிறார்? பொதுவாகவே இங்கீலீஷை மனப்பாடம் செய்யச் சொல்லி பேசுறது ஈசி. என்னோட ஸ்டூடண்ட்ஸ் அப்படி இல்ல,. நீங்க தலைப்பு கொடுத்தா, தாய்மொழியில் நாம எப்படி உள்ளத்தில் இருந்து பேசுவோமோ அது மாதிரி பேசுவாங்க. ஆங்கிலம் என்பது மொழி தானே தவிர, அறிவு கிடையாது. அதை மாணவர்களுக்கு எடுத்துச் சொன்னேன். உங்களால் முடியும் என தன்னம்பிக்கை ஊட்டினேம். அந்த மொழியில் இப்போது பின்னி பிடலெடுக்கிறார்கள்.

இதற்கென tri_verb technique என தொழில்நுட்பத்தை உருவாக்கினேன். action verb, have verb, be verb என ஸ்ட்ராங் ஆக்கினேன். தொடர்ந்து ஆங்கில இலக்கணமே இல்லாமல் 500 வினைச் சொற்களை கற்றுக் கொடுத்தேன். அவைகளின் அர்த்தமும் சொல்லிக் கொடுத்தேன். இப்போ என் மாணவர்கள் ஆங்கிலத்தில் அசத்துறாங்க. பேச ஆரம்பிக்கும் போது கொஞ்சம் இலக்கண பிழை இருக்கும். போக, போக நான் அதை திருத்திக்குவேன். கூடவே நின்னும்”என்பவர் அடுத்து சொன்னது தான் ரிஹ்யலி வாவ் ரகம்.

தன்னிடம் பயின்ற சற்றே அறிவுசார் குறைபாடுடைய தனுஷ் குமாருக்கு தான் இதை முதலில் சோதனை அடிப்படையில் சொல்லிக் கொடுத்துள்ளார் சிவக்குமார். இப்போது தனுஷ் சாதாரணமாக நாம் பேசினாலே ஆங்கிலத்தில் பதில் சொல்லி அசத்துகிறான். பட்டையை கிளப்பும் இந்த அரசு பள்ளி மாணவர்களுக்காக நாமும் லைக்ஸ் பட்டனை தெறிக்க விடலாமா?


நண்பர்களுடன் பகிர :