பிள்ளைங்க இரண்டு நாளா சாப்பிடல... போஸ்டர் அடித்து ஒட்டிய தந்தை! Description: பிள்ளைங்க இரண்டு நாளா சாப்பிடல... போஸ்டர் அடித்து ஒட்டிய தந்தை!

பிள்ளைங்க இரண்டு நாளா சாப்பிடல... போஸ்டர் அடித்து ஒட்டிய தந்தை!


பிள்ளைங்க இரண்டு நாளா சாப்பிடல...      போஸ்டர் அடித்து ஒட்டிய தந்தை!

தன் குழந்தைகள் இரண்டு நாளா சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதாக தந்தை ஒருவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ள சம்பவம் உணர்ச்சி வசப்பட வைக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கட்டையன்விளை ஈ.பி ஆபிஸ் அருகே உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் ஆசைக்காக நாய் ஒன்று வாங்கிக் கொடுத்தனர். கருப்பான நிறத்தில் இருந்த அந்த நாட்டு நாய்க்குட்டி குழந்தைகளிடமும் மிகவும் அன்யோன்யமாக பழகிவிட்டன. தொடர்ந்து வீட்டில் இருந்த பெரியவர்களும் அதனிடம் மிகுந்த நேசம் காட்டினர்.

அந்த வீட்டில் குழந்தைகளுக்கு இணையான முக்கியத்துவம் அந்த கருப்பு நிற நாட்டு நாய்க்கும் கிடைத்தது. உறவினர் வீடுகளுக்கு குடும்பத்தோடு செல்லும் போதும் இந்த கருப்பு நாய்க் குட்டியை கூடவே அழைத்துச் செல்வார்கள். யாரைப் பார்த்தும் குரைக்கவோ, கடிக்கவோ செய்யாத அந்த நாய்க்குட்டி அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதியே கட்டையன் விளை ஈ.பி ஆபிஸ் பக்கத்தில் உள்ள அவர்கள் வீட்டில் இருந்த இந்த நாய்குட்டியை திடீரென காணவில்லை. பக்கத்தில் எங்காவது தான் சென்றிருக்கும் வந்துவிடும் என குடும்பத்தோடு காத்திருந்தனர். ஆனால் வரவில்லை. ஒருவாரம், பத்து நாள்கள், பதினைந்து நாள்கள் என கடந்தும் நாய் வீடு வந்து சேரவில்லை. இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான குழந்தைகள் சாப்பிடவும் செய்யாமல், தூங்கவும் செய்யாமல் கடந்த இரு நாள்களாக அதையே நினைத்து புலம்பியுள்ளனர்.

இந்நிலையில் அந்த குடும்பத்தின் சார்பில் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் நாய்குட்டியின் படம் போட்டு குழந்தைகள் சாப்பிடாமல், தூங்காமல் இருப்பதால் தவறுதலாக எடுத்தவர்கள் தயவு செய்து திரும்பத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என உருக்கமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நாய் நன்றியுள்ள ஜீவன் என்பார்கள். அந்த ஜீவனுக்காக பாசத்தோடு தோடி வரும் இந்த குடும்பத்துக்கு அவர்கள் கருப்பு நாய் சீக்கிரமே கிடைக்கட்டும்!


நண்பர்களுடன் பகிர :