இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்! Description: இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்!

இனி சீனா செல் மட்டும் இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்!


இனி சீனா செல் மட்டும்  இல்ல... சீனர்களும் பராக்..பராக்... சீனர்களின் தமிழ்பற்று பின்னணி இதுதான்!

இதுவரை நம்ம ஊருக்கு சைனா செல்கள் தான் வந்து கொண்டு இருந்தன. இன்னும் சில ஆண்டுகளில் அதிகமான சைனாக்காரர்களும் வரப் போகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதிலும் சிங்காரச் சென்னையில் டீநகரில் நின்று கொண்டு சரவணா ஷ்டோருக்கு தூய தமிழில் வழி கேட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. அண்மைக்காலமாக சீனர்களுக்கு தமிழார்வம் உச்சத்தில் இருக்கிறது. சமீபத்தில் பொங்கல் அன்றும் கூட சோசியல் மீடியாக்களை தமிழ் பேசி ஷேர்களால் தெரிக்க விட்டனர். இனி விசயத்துக்கு வருவோம்.

சீனாவின் யூனான் மாநிலத்தில் உள்ள யூனான் மின்சு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாச்சாரக் கல்லூரியில் தமிழ்துறையும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2017 மார்ச் மாதத்திலேயே இந்த துறை துவங்கப்பட்டு விட்டது. இதில் இப்போது ஆறு சீன மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நான்காண்டு படிப்பாக தமிழ் இளங்கலை இங்கு செயல்பட்டு வருகிறது. இதைப் படிப்போருக்கு அரசு உதவித்தொகை கூட வழங்குகிறது. மூன்றாவது ஆண்டில் இந்த மாணவர்களை தமிழகத்தின் ஏதாவது ஒரு கல்லூரிக்கு அழைத்து வரவும் சீன அரசு முயற்சி எடுக்கிறது.

ஆனால் இதெல்லாம் எதற்கு என்று தெரியுமா? சென்னையில் ஏராளமான சீன நிறுவனங்களின் கிளை, தொழிற்சாலை, துணை நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கு இருக்கும் சீனர்கள் ஆங்கிலத்தை வைத்தே சமாளிக்கும் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு கீழ் வேலை செய்யும் தமிழர்களை எதிர்கொள்ள சீன.மொழியும், தமிழும் தெரிந்த நிறைய பேர் அவர்களுக்கு தேவை. இதுபோக தென்னிந்தியாவின் கலாச்சாரத்தை அறிந்து கொள்ளவும் சீனர்களுக்கு தமிழ் அவசியமாம்...

சீனாக்காரர்கள் தமிழின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்க நம்மூரு அம்மாக்கள், பிள்ளைகள் "மம்மி" என கூப்பிடுவதை ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள். எகிப்து மொழியில் மம்மி என்பதன் பொருள் பிணம் என்பதை மறந்து!


நண்பர்களுடன் பகிர :