காரைக்குடி பையனுக்கும், அமெரிக்க பொண்ணுக்கும் டும்..டும்..டும்.. தமிழ் கலாச்சாரத்தை விரும்பி விமானம் ஏறிய வெளிநாட்டு குடும்பம்.. Description: காரைக்குடி பையனுக்கும், அமெரிக்க பொண்ணுக்கும் டும்..டும்..டும்.. தமிழ் கலாச்சாரத்தை விரும்பி விமானம் ஏறிய வெளிநாட்டு குடும்பம்..

காரைக்குடி பையனுக்கும், அமெரிக்க பொண்ணுக்கும் டும்..டும்..டும்.. தமிழ் கலாச்சாரத்தை விரும்பி விமானம் ஏறிய வெளிநாட்டு குடும்பம்..


காரைக்குடி பையனுக்கும், அமெரிக்க பொண்ணுக்கும் டும்..டும்..டும்..    தமிழ் கலாச்சாரத்தை விரும்பி விமானம் ஏறிய வெளிநாட்டு குடும்பம்..

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். காதல் திருமணங்கள் அதற்கும் ஒரு படி மேலே தான். பரஸ்பரம் முன்னரே புரிந்து கொண்ட இரு உள்ளங்கள் இணையும் இந்நிகழ்வு ஒரு வகையில் வைபோகமே...அதிலும் தமிழர் ஒருவரைக் காதலித்த அமெரிக்கப் பெண் தமிழ் கலாச்சாரப்படி தன் திருமணத்தை செய்து கொள்ள அமெரிக்காவில் இருந்து விமானத்தில் வந்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்துவந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த வைத்தியர் சிவக்குமாரும், அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சேர்ந்த எலிசபெத் ஆனும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். தங்களது பள்ளிக்காலம் தொட்டே இருவரும் காதலித்து வந்தனர். கல்லூரியெல்லாம் முடிந்த பின்னரும் இரு வீட்டாரிடமும் தங்கள் காதலைச் சொல்ல அவர்களும் சம்மதித்தனர்.

இதில் எலிசபெத் ஆன் கிறிஸ்தவ மதத்தையும், சிவக்குமார் இந்து மதத்தையும் சேர்ந்தவர். அதற்காக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த கோவில் படத்தைப் போல இருவீட்டாருக்கு இடையிலும் பகையெல்லாம் ஏற்பட்டுவிடவில்லை. காதலுக்கு மரியாதை கிளைமேக்ஸ் காட்சி போல், உங்க வீட்டு பொண்ணை நீங்களே எடுத்துக்கங்கன்னு சொல்லாத குறையாக நேசம் காட்டினர் இரு குடும்பத்தினரும்.

இரு குடும்பமும் கூடிப்பேசி தமிழ்க் கலாச்சாரப்படி திருமணம் செய்ய தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து மணமகள், அவரது உறவுகள் என 12 பேர் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து தரைவழியில் காரைக்குடிக்கு வந்தனர். எலிசபெத் ஆனின் கழுத்தில் தமிழ் முறைப்படி சிவக்குமார் தாலி கட்டினார். தமிழ் கலாச்சாரத்தின் சடங்கு, சம்பிரதாயங்களைப் பார்த்து அமெரிக்காவினர் வியந்து போயினர். அதேநேரம் இது மிகவும் பிடித்திருப்பதாவும் கூறினார்கள்.

பின்னே, தமிழ்க் கலாச்சாரம்ன்னா சும்மாவா?


நண்பர்களுடன் பகிர :