தமிழ் பாட்டை ஆதரிப்பதா? குத்து ரம்யா மீது பாய்ந்த கன்னட ரசிகர்கள்.. Description: தமிழ் பாட்டை ஆதரிப்பதா? குத்து ரம்யா மீது பாய்ந்த கன்னட ரசிகர்கள்..

தமிழ் பாட்டை ஆதரிப்பதா? குத்து ரம்யா மீது பாய்ந்த கன்னட ரசிகர்கள்..


தமிழ் பாட்டை ஆதரிப்பதா? குத்து ரம்யா மீது பாய்ந்த கன்னட ரசிகர்கள்..

யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2வில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் பாடல் தான் அதுவரை வந்த தமிழ் படங்களில் யூடியூப்பில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வீடீயோ. அதை பீட் செய்தத மாரி 2 பாடலை பாராட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார் குத்து ரம்யா.

இதுகுறித்து குத்து ரம்யா தனது ட்விட்டர் பக்கத்தில் "நல்ல பாடலை 100 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இதனைப் பார்த்து கொதிப்படைந்த கன்னட ரசிகர்கள் " பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கே.ஜி.எப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இந்தியாவைக் கடந்து பாகிஸ்தான் நாட்டிலும் அந்த படம் வெளியாகி உள்ளது. பல மொழிகளில் அந்த படம் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது.

ஆனால் அந்த படத்தைப் பற்றி ரம்யா பேசவில்லை. சொகுசு விடுதியில் தாக்கிக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கல் பற்றி பேசி இருக்கலாம். அதுவும் பேசவில்லை. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்து பேச மட்டும் நேரம் இருக்கிறது என சீண்டி உள்ளனர்.

ஜனநாயக நாட்டில் மனதில் தோன்றியது கூட பேசக் கூடாதா என புலம்பி வருகிறார் குத்து ரம்யா...


நண்பர்களுடன் பகிர :