தினமும் ஜீன்ஷ் பேண்ட் அணிபவரா நீங்கள்? இதை முதலில் பாருங்க... Description: தினமும் ஜீன்ஷ் பேண்ட் அணிபவரா நீங்கள்? இதை முதலில் பாருங்க...

தினமும் ஜீன்ஷ் பேண்ட் அணிபவரா நீங்கள்? இதை முதலில் பாருங்க...


தினமும் ஜீன்ஷ் பேண்ட் அணிபவரா நீங்கள்? இதை முதலில் பாருங்க...

எப்போதும் ஜீன்ஷ் பேண்டிலேயே சுற்றும் பலர் உண்டு. அதிலும் இன்றைய நாகரீக யூத்களின் அடையாளமாக ஜீன்ஷ் பேண்ட் மாறி உள்ளது.

அழுக்கா போட்டாத்தான் ஜீன்ஷ்...அரியர் போட்டாத்தான் காலேஜ் என கல்லூரி யூத்கள் கலாய்த்துக் கொள்ளும் அளவுக்கு ஜீன்ஷ் பேண்ட்க்கு மவுசு உண்டு. அதே நேரம் இந்த ஜீன்ஷ் பல்வேறு உடல் ரீதியான கோளாறுகளுக்கும் வழி செய்து விடுகிறது.

முக்கியமாக தொடர்ந்து இறுக்கமான ஜீன்ஷ் பேண்ட் அணிவதால் விதைப்பை பாதிக்கப்பட்டு விந்தணு உற்பத்தி குறையும். இதே போல் நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது ஜீன்ஷ் போன்ற இறுக்கமான உடையை உடுத்த போது அடிவயிற்றில் அது அழுத்தும். இந்த அழுத்தம் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை மேல் நோக்கி நகர்த்தும். இதனால் நெஞ்செரிச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு அது அதிகரிக்கும்.

தொடைத்தசை பகுதிகள், தோல்கள் ஆகியவையும் பாதிக்கப்படும். சிறுநீர் பாதை தொற்று உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஜீன்ஷ் அணிவது தப்பே இல்லை. ஆனால் தினசரி ஜீன்ஷை மட்டுமே போடுபவர் கள் கொஞ்சம் யோசிங்கப்பா...


நண்பர்களுடன் பகிர :