தும்பிக்கை காயத்தினால் ஊட்டிவிட்ட மனிதர்... இறந்தது தெரியாமல் தினம் தேடித்தவிக்கும் காட்டு யானை! Description: தும்பிக்கை காயத்தினால் ஊட்டிவிட்ட மனிதர்... இறந்தது தெரியாமல் தினம் தேடித்தவிக்கும் காட்டு யானை!

தும்பிக்கை காயத்தினால் ஊட்டிவிட்ட மனிதர்... இறந்தது தெரியாமல் தினம் தேடித்தவிக்கும் காட்டு யானை!


தும்பிக்கை காயத்தினால் ஊட்டிவிட்ட மனிதர்... இறந்தது தெரியாமல் தினம் தேடித்தவிக்கும் காட்டு யானை!

யானைக்கு பலம் தும்பிக்கையில்...மனிதருக்கு பலம் நம்பிக்கையில் என்பது பழமொழி. ஆனால் தும்பிக்கையில் காயம்பட்ட காட்டு யானை ஒன்று, ஒரு மனிதரின் மீது உயிரையே வைத்து பாசமாய் திரிவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மசினக்குடி. வனப்பகுதியான இங்கு ஏராளமான யானைகளும் உண்டு. இவை காட்டு யானைகள் என்பதால் மனிதர்களைக் கண்டால், அவர்கள் நம்மை துன்புறுத்தவே வருவதாக நினைத்து துரத்துவது வழக்கம். வனப்பகுதியில் இருந்து காட்டு பன்றிகளும் விளைநிலங்களுக்குள் புகுந்து வேட்டையாடிவிடும் என்பதால் இப்பகுதிகளில் காட்டுப்பன்றிகளுக்கும் பொறி வைப்பது வழக்கம். அப்படியான பொறியில் தவறுதலாக சிக்கிவிட்டது இந்த காட்டு யானை.

இதனால் தும்பிக்கையில் கடும் காயம் ஏற்பட்டது. பொதுவாக யானைகள் தும்பிக்கையின் மூலமே உணவை எடுத்து வாயில் திணிப்பது வழக்கம். ஆனால் தும்பிக்கை காயத்தால் தவித்த அந்த காட்டு யானை, அந்த பகுதியில் இருந்த மார்க் என்பவருக்குச் சொந்தமான விடுதியின் அருகில் சென்றது. காட்டு யானையைப் பார்த்து முதலில் மிரண்டு போன மார்க் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து சிகிட்சை அளித்தும் யானைக்கு துதிக்கையில் தூக்கி உணவை சாப்பிடுவது சவாலாக இருந்தது.

கடைசியில் பயத்தோடு அவரே உணவு ஊட்ட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் காட்டு யானையும், மார்க்ம் க்ளோஸ் நண்பர்களாகிவிட, மசினகுடியில் இருந்து மார்க்கின் விடுதிக்கு வந்து அவர் கையால் சாப்பிட்டு விட்டு செல்லும் காட்டு யானை. கால்பந்து விளையாட்டின் மீது தீராத ஆர்வம் கொண்ட மார்க், பிரேசில் நாட்டு கால்பந்து வீரர் ரிவோல்டோவின் ரசிகர். அதனால் இந்த காட்டு யானைக்கு ரிவால்டோ என்றே பெயரிட்டார். காட்டு யானையாக இருந்தாலும், மனிதர்களைத் துரத்தாமல் மார்க்கின் அரவணைப்பில் அவர் கையால் அமுதுண்டு வாழ்ந்து வந்தது யானை.

இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவால் மார்க் சில தினங்களுக்கு முன்பு இறந்துபோனார். ஆனால் அவரது இறப்பு குறித்து தெரியாமல் அவர் கையால் சாப்பிட, தினமும் சாப்பாட்டு நேரத்துக்கு விடுதிக்கு வந்து விடுகிறது யானை. வாசலில் இருந்து மார்க்கின் வருகைக்காக பிளிறிக் கொண்டு, அவர் வராததால் சோகத்துடன் திரும்பிச் செல்கிறது. கடந்த சிலதினங்களாக இதுதொடர்ந்து நடந்து வர, காண்போரை இது கண்கலங்க வைக்கிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?


நண்பர்களுடன் பகிர :