உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...! Description: உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...!

உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்.. இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...!


உருகவைத்த மாணவர்கள்...உடைந்துபோன ஆசிரியர் குடும்பம்..   இறுதி சடங்கிலும் மரியாதை செய்து உருக்கம்...!

மாணவர்கள், நாட்டின் எதிர்காலத்தை செதுக்கும் சிறிபிகளே ஆசிரியர்கள் தான். அந்த வகையில் தங்கள் தலைமையாசிரியர் மறைவுக்கு மாணவர்கள் செய்த மரியாதை காண்போரை உருகவைத்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பாத் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருந்தவர் சூ ஈஸ்ட். இவர் பணிபுரிந்த பள்ளியில் மாணவ, மாணவிகளிடம் செம ரீச் ஆனவர். அவரது பாடம் கற்பிக்கும் பணியின் சுவாரஸ்யத்தால் இந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். இந்நிலையில் திடீரென சூ ஈஸ்ட்க்கு புற்றுநோய் ஏற்பட்டது.

மருத்துவமனையில் சிகிட்சையில் இருந்தபோதே அவர் தன் மாணவ, மாணவிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில்,’’1952ம் ஆண்டு தி வாயேஜ் ஆப் தி டான் ட்ரீடர் என்னும் நாவல் வெளியானது. அதில் மரணம் குறித்து வருகிறது. அந்த வரிகளை என் செல்லங்களாகிய உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.

மரணம் என்பது ஒரு சிறிய சுற்றுப்படகில் அடிவானத்தில் பயணம் செய்வதற்கு சமம். அதுபோல் நான் பயணம் செய்யப் போகிறேன் எனக் குறிப்பிட்டு எழுதினார். இதைப் படித்த மாணவ, மாணவிகள் உருகிப் போயினர். இந்நிலையில் அவர் மரணம் அடைந்தார். இது அவரிடம் படித்த மாணவர்களுக்கு தீராத சோகத்தை ஏற்படுத்தியது.

உடனே அவர்கள் சேர்ந்து தங்கள் ஆசிரியை ஓய்வெடுக்கும் சவப்பெட்டியில் ஓட்டுவதற்கென வண்ண, வண்ண ஓவியங்களைத் தீட்டிக் கொண்டு வந்தனர். அதை அவர்கள் சவப்பெட்டி முழுவதும் ஒட்ட அதன் பின்னரே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதைப் பார்த்த அந்த தலைமையாசிரியையின் மொத்த குடும்பமும் கண்ணீரில் உறைந்தது.


நண்பர்களுடன் பகிர :