இப்படியும் கூட டிக்கெட்க்கு இடம் பிடிக்கலாம்.... இது ரயில்வே துறை ஆச்சர்யம்... Description: இப்படியும் கூட டிக்கெட்க்கு இடம் பிடிக்கலாம்.... இது ரயில்வே துறை ஆச்சர்யம்...

இப்படியும் கூட டிக்கெட்க்கு இடம் பிடிக்கலாம்.... இது ரயில்வே துறை ஆச்சர்யம்...


இப்படியும் கூட டிக்கெட்க்கு இடம் பிடிக்கலாம்.... இது ரயில்வே துறை ஆச்சர்யம்...

ரயிலில் இடம்பிடிக்க காத்து நிற்பவர்கள் பலரை பார்த்து இருப்பீர்கள். ஆனால் ரயிலில் டிக்கெட் எடுக்கவே கல்லையும், தண்ணீர் பாட்டிலையும் முந்தைய நாள் வந்து வைத்து சென்று ஆச்சர்யம் ஊட்டுகின்ரனர்.

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு உள்ள நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி, அனந்தபுரி உள்ளிட்ட ரயில்கள் சென்னைக்கு செல்கின்றன.

ஆனால் சென்னைக்கு கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்து கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் பயணிக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இந்த இரயில்கள் முன்னரே முன்பதிவு செய்யப்பட்டு விடுவதால் ஏராளமான நபர்கள் தனியார், அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

இன்னும் சிலர் தட்கல் டிக்கெட்க்கு முயற்சி செய்கின்றனர். பொதுவாக தட்கல் டிக்கெட்க்கு காலையில் 8 மணிக்கு டோக்கன் வினியோகிக்கப்படும். அதில் வரும் டோக்கன் முன்னுரிமையின் அடிப்படையில் டிக்கெட் ரிசர்வேசன் செய்யப்படும்.

காலை 8 மணிக்கு தான் டோக்கன் கொடுப்பார்கள் என்றாலும், முந்தைய நாள் மாலையிலேயே நாகர்கோவில் ரயில்வே ஷ்டேசனில் இதற்கென க்யூ துவங்கி விடுகிறார்கள் மக்கள். அதிலும் முந்தைய நாள் மாலையே ரிசர்வேசன் பார்ம் நிரப்பி அதன் மேல் கல், வாட்டர் பாட்டில் ஆகியவற்றை வைத்து வரிசை கட்டுகின்றனர்.

இதுபோக டிக்கெட் எடுத்து தருபவர்கலுக்கு 100 ரூபாய் சம்பளத்தை கொடுத்தும் நாகர்கோவிலில் நபர்கள் பிடிக்கின்றனர். சாதாரண டிக்கெட் ரிசர்வேசன் தான். ஆனால் அதன் பின்னர் எத்தனை சுவாரஸ்யமான விசயங்கள் இருக்கின்றன...


நண்பர்களுடன் பகிர :