அப்பா, அம்மா இல்லாத சிறுமி வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி : நெகிழ்ச்சி பதிவு Description: அப்பா, அம்மா இல்லாத சிறுமி வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி : நெகிழ்ச்சி பதிவு

அப்பா, அம்மா இல்லாத சிறுமி வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி : நெகிழ்ச்சி பதிவு


அப்பா, அம்மா இல்லாத சிறுமி வினோதினிக்கு கிடைத்த திடீர் மகிழ்ச்சி : நெகிழ்ச்சி பதிவு

தமிழகத்தில் அம்மா அப்பா இல்லாமல் பாட்டியுடன் வளரும் நான்காவது படிக்கும் மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் தலைமையில் பள்ளியிலே காதணி விழா நடத்திய நிலையில் சிறுமியின் வாழ்க்கை மிகவும் சோகம் நிறைந்துள்ளது என தெரியவந்துள்ளது.

கோவையை அருகே உள்ள ராமசெட்டிப்பாளையம் அரசு பள்ளியின் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி வினோதினி, அவருக்கு பெற்றோர்கள் இல்லை. அப்பா உடல் நிலை சரியில்லாமல் இறந்துவிட , அம்மா அவரை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு,இன்னொரு வாழ்க்கையை தேடி சென்றுவிட்டார். சிறுமியை அவர் பாட்டி வளர்த்து வருகின்றார்.

சிறுமி வினோதினிக்கு கம்மல் அணிந்து பள்ளிக்கு போக வேண்டும் என்பது அவரது பலநாள் கனவு. ஆனால் அந்த சிறுமியின் கும்ப சூழலில் பள்ளிக்கு செல்வதே பெரும் கடினம் , பிறகு எவ்வாறு காதணி விழா நடத்துவது.

ஒருநாள் சிறுமி வினோதினி தனது நண்பர்களிடம் இதை பற்றி பேசி மனம் வருந்தியிருக்கிறாள்.இதை சிறுமியின் நண்பர்கள் ஆசிரியர்களிடம் கூறியிருக்கின்றனர்.இதை கவனித்த ஆசிரியர்கள் அச்சிறுமிக்கு பள்ளியிலேயே காதணிவிழாவை சிறப்பித்து நடத்தியுள்ளனர். மாணவ மாணவியர்கள் சீர்வரிசை எடுத்து வர, பள்ளி ஆசிரியர்கள் மடியிலேயே மாணவிக்கு காதணி அணிவிக்கப்பட்டது. இதனால் அச்சிறுமியும் அவர் பாட்டியும் மிகவும் மகிழ்ச்சி ஆகியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :

N
Nama 1வருடத்திற்கு முன்
இது போல் ஒருசில ஆசிரியர்கள் இருக்கும் வரை எந்த ஒரு குழந்தையும் அனாதை இல்லை வாழ்த்துக்கள்
N
Nama 1வருடத்திற்கு முன்
இது போல் ஒருசில ஆசிரியர்கள் இருக்கும் வரை எந்த ஒரு குழந்தையும் அனாதை இல்லை வாழ்த்துக்கள்