அப்பாவுக்கு ஆப்ரேஷன்...மகனுக்கு கல்யாணம்... பாசப்போராட்டத்தில் திணறிப் போன அரசு மருத்துவமனை Description: அப்பாவுக்கு ஆப்ரேஷன்...மகனுக்கு கல்யாணம்... பாசப்போராட்டத்தில் திணறிப் போன அரசு மருத்துவமனை

அப்பாவுக்கு ஆப்ரேஷன்...மகனுக்கு கல்யாணம்... பாசப்போராட்டத்தில் திணறிப் போன அரசு மருத்துவமனை


அப்பாவுக்கு ஆப்ரேஷன்...மகனுக்கு கல்யாணம்... பாசப்போராட்டத்தில் திணறிப் போன அரசு மருத்துவமனை

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை நேற்று இரவு வழக்கம் போல் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நேரம் அங்குள்ள விநாயகர் கோவிலின் முன்பு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இரு வீட்டார் முன்னின்று ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டிருந்தது. இதில் மணமகனின் தந்தைக்கு அதே மருத்துவமனையில் இன்று அறுவை சிகிட்சை நடந்தது. இந்த திருமணமே ஒரு பாசப் போராட்டக் கதை தான்!

சென்னை திருவொற்றியூர் மேற்குமாட வீதியைச் சேர்ந்தவர் சுதேஷ். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், மூன்று ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் சதீஸ்(28) க்கு , சித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இவர்களின் திருமணம் பிப்ரவரி 15ல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சதீஸின் தந்தை சுதேஷ் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி, திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற சுதேஷ் எலக்ட்ரிக் ரயிப்ன் மோதி படுகாயமடைந்தார்.

அதிலும் இடுப்புக்கு கீழான பகுதிகள் முற்றாக செயல்படவில்லை. அபாய நிலையில் இருக்கும் சுதேஷ்க்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்று அறுவை சிகிட்சை நடந்தது. முன்னதாக இது மிகவும் அபாயகரமான அறுவை சிகிட்சை என்பதால் அவரது மகன் சதீஸ் தனது திருமணத்தை தந்தை பார்க்க வேண்டும் என விரும்பினார். அதனால் அறுவை சிகிட்சைக்கு முன்னரே திருமணம் செய்ய முடிவு எடுக்க அதற்கு பெண் வீட்டாரும் சம்மதித்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிள்ளையார் கோயில் முன்பு சதீஸ், சித்ராவை மணந்தார்.

மொத்த ஸ்டான்லி மருத்துவமனையும் நேற்று இரவு இவர்களின் பாசப் போராட்டத்தில் நனைந்தது. நேற்று இரவு திருமணம் முடிந்த கையோடு, மருத்துவமனையில் சிகிட்சையில் இருக்கும் சுதேஷ்டம் தம்பதிகள் ஆசி பெற்றனர். இந்நிலையில் சுதேஷ்க்கு அறுவை சிகிட்சையும் இன்று முடிந்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :