புற்றுநோயை தவிர்க்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்.. Description: புற்றுநோயை தவிர்க்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்..

புற்றுநோயை தவிர்க்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்..


 புற்றுநோயை தவிர்க்க இந்த உணவுகளை தவிர்த்தாலே போதும்..

உலக அளவில் மக்களை அதிக அளவில் அச்சுறுத்தும் நோய்களின் பட்டியலில் இணைந்துள்ளது புற்றுநோய். ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. புற்றுநோய் பரவ சில உணவுகளும் காரணமாக இருக்கிறது. அதைத் தவிர்த்தாலே நோய் தொற்றாமல் சில வகை புற்றுநோய்களை நெருங்க விடாமல் செய்து விடலாம்.

க்ரில், தந்தூரி என நன்கு ஆயிலில் சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் புற்றுநோயை உண்டாக்கும் காரணி ஆகிறது. இறைச்சியானது பார்பிக்யூ வடிவில் சமைக்கும்போது அது கார்சினோஜெனிக் என்னும் நச்சுப்பொருளை உருவாக்குகிறது. இதுகூட புற்றுநோயை உருவாக்கும் காரணியாகிறது.

அதிக உப்புள்ள உணவுகள் கூட சில நேரங்களில் வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கும். ஆசியாவில் மித மிஞ்சிய உப்பு சேர்த்து புற்றுநோய் வந்தவர்கள் அதிகம் என்கிறது ஆய்வு ஒன்று. பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சிகள் நைட்ரைட்டை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுகையில் குடல் புற்றுநோயும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அளவுக்கு மிஞ்சிய ஆல்கஹால் பயன்பாடு சிலருக்கு புற்றுநோய் ஏற்பட காரணம் ஆகிறது.உடலில் சேரும் கொழுப்புக்கும், புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டு. இதனால் உடலில் கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :