காவல்துறையில் பெரிய மீசை வைச்சா கூடுதல் தினப்படி... ஒரு அட்ரா சக்கை அறிவிப்பு Description: காவல்துறையில் பெரிய மீசை வைச்சா கூடுதல் தினப்படி... ஒரு அட்ரா சக்கை அறிவிப்பு

காவல்துறையில் பெரிய மீசை வைச்சா கூடுதல் தினப்படி... ஒரு அட்ரா சக்கை அறிவிப்பு


காவல்துறையில் பெரிய மீசை வைச்சா கூடுதல் தினப்படி...       ஒரு அட்ரா சக்கை அறிவிப்பு

மீசைன்னாலே கெத்தான விஷயம் தான். என்னதான் கோழையாகவே ஒருவர் இருந்தாலும் முரட்டு மீசை வைத்து விட்டால் பார்ப்பவரே பயந்து விடுவார். அப்படியான தோற்றம் தான் வீரத்தின் அடையாளமாக பார்க்க படுகிறது.

இப்படியான சூழலில் காவல் துறையில் பெரிய மீசை வைப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டுள்ளது உத்திரப்பிரதேச அரசு. உத்திரப்பிரதேச மாநில காவல்துறை துணை இயக்குனர் பினோத்குமார் சிங் இதுகுறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பையே நிகழ்த்தினார். அப்போது அவர், ‘’ ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலேயே காவலர்கள் பெரிய மீசை தான் வைத்திருந்தனர். ஆனால் தற்போது காலம் மாற, மாற இப்போதைய தலைமுறையினரிடம் மீசையே இல்லாமல் போய்விட்டது.

மீசை வைப்பதும், வைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் காவல்துறைக்கு மிடுக்கே கம்பீரமான மீசை தான். இதை மீட்டுக் கொண்டு வரவும், இளைய தலைமுறைக்கு மீசை வைக்கும் ஆர்வத்தைக் கொடுக்கவும் ஒரு புதிய முறையை அறிமுகம் செய்கிறோம். இனி உத்திரப்பிரதேச காவல் துறையில் பெரிய மீசை வைக்கும் காவலர்களுக்கு தினப்படி 5 மடங்கு உயர்த்தப்படும்.”என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் தற்போது 50 ரூபாய் தினப்படி பெற்று வரும் காவலர்கள் பெரிய மீசை வைத்தால் 250 ரூபாய் கிடைக்கும். அப்புறம் இந்த பேட்டி கொடுத்த உ.பி காவல்துறை துணை இயக்குனர்பினோத்குமாரும் பெரிய மீசைக்கு சொந்தக்காரர் தான்! .


நண்பர்களுடன் பகிர :