பீர் பாட்டிலில் விநாயகர் படம்! சந்தைக்கு வரும் முன் தடுக்குமா அரசு? Description: பீர் பாட்டிலில் விநாயகர் படம்! சந்தைக்கு வரும் முன் தடுக்குமா அரசு?

பீர் பாட்டிலில் விநாயகர் படம்! சந்தைக்கு வரும் முன் தடுக்குமா அரசு?


பீர் பாட்டிலில் விநாயகர் படம்! சந்தைக்கு வரும் முன் தடுக்குமா அரசு?

‘’பிள்ளையார் சுழி போட்டு செயலை துவங்கு’’ என்பார்கள். இந்து மதக் கடவுளான விநாயகனை துதித்த பின்பே பிற தெய்வங்களை வணங்குவது மரபு. விநாயகன் வினை தீர்ப்பவன் என்றும் பக்தர்களால் சிலாகிக்கப்படுபவர். இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட விநாயகரை ஒரு பீர் கம்பெனி தனது பாட்டிலில் போட்டுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் இந்தியாவைக் கடந்தும், வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தர்களைக் கொண்டவர். மங்கோலியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தங்களின் பணத்தாளில் விநாயகர் படத்தை வெளியிட்டு பெருமை சேர்த்துள்ளன.

இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையும் விநாயகர் பெயரில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியெல்லாம் பெருமை கொண்ட விநாயகரின் படத்தை ஆஸ்திரேலியாவில் உள்ள ’’brookvale union' என்னும் பீர் கம்பெனி தனது புதிய வரவான ‘’ஜிஞ்சர் பீரின்’’ பாட்டிலில் போட்டுள்ளது.

அதை விரைவில் வருகிறது என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது. இதுவரை சந்தைக்கு வராத ஆஸ்திரேலிய பீர் நிறுவனத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் மூலம், ஆஸ்திரேலிய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விநாயகர் புகழ் காக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


நண்பர்களுடன் பகிர :