பேட்ட, விஸ்வாசத்தை அடிச்சு தூக்கிய டாஸ்மாக்! கலெக்சன் பொங்க வைத்த குடிமக்கள்... Description: பேட்ட, விஸ்வாசத்தை அடிச்சு தூக்கிய டாஸ்மாக்! கலெக்சன் பொங்க வைத்த குடிமக்கள்...

பேட்ட, விஸ்வாசத்தை அடிச்சு தூக்கிய டாஸ்மாக்! கலெக்சன் பொங்க வைத்த குடிமக்கள்...


பேட்ட, விஸ்வாசத்தை அடிச்சு தூக்கிய  டாஸ்மாக்!    கலெக்சன் பொங்க வைத்த குடிமக்கள்...

பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 10ம் தேதி வெளியான பேட்ட, விஸ்வாசம் படங்கள் வசூலில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் இவ்விரு திரைப்படங்களும் 100 கோடி வசூலை தாண்டியுள்ள நிலையில், மூன்று நாள் பொங்கல் விடுமுறையில் மட்டும் 500 கோடி வசூலைக் குவித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம்.

கடந்தவார வியாழக் கிழமை அஜித்குமார் நடிப்பில் விஸ்வாசம், ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. கிராமத்து கதைக்களத்தையும், தந்தை_மகள் பாசத்தையும் மையக் கருவாகக் கொண்ட விஸ்வாசம் பி,சி செண்டர்களில் வசூலில் அடிச்சி, தூக்கி வருகிறது. அதேபோல் நீண்ட காலத்துக்கு பின்பு பேட்டயில் இளமை, சுறுசுறுப்பு என கார்த்திக் சுப்புராஜ் கைவண்ணத்தில் பழைய சூப்பர் ஸ்டாராக அசத்துகிறார் ரஜினிகாந்த். இதனால் இவ்விரு படங்களுமே பல ஊர்களிலும் ஒருவாரம் கடந்தும் அரங்கம் நிறைந்தே ஓடுகிறது.

விஸ்வாசத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி, அப்படம் ஒருவாரத்தில் 100 கோடி கலெக்சனை எட்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல் பேட்டயும் நல்ல தொகை வசூலித்துள்ளது. இதையெல்லாம் அலேக்காக பீட் செய்து கம்பீரமாக முன்னிலையில் நிற்கிறது டாஸ்மாக் நிறுவனம்.

இந்த ஆண்டு போகி பண்டிகை(14-ந்தேதி) அன்று 143 கோடி ரூபாய்க்கு மதுபான விற்பனை நடந்ததுள்ளது. அதேநேரம் கடந்த ஆண்டு இந்த விற்பனை 133 கோடியாக இருந்தது. அதேபோன்று பொங்கல் தினத்தன்று(15-ந்தேதி) 209 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த விற்பனை ரூ.204 கோடியாக இருந்தது. திருவள்ளுவர் தினமான 16-ந்தேதி மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

காணும் பொங்கல் தினமான 17-ந்தேதி(நேற்று) மதுபான விற்பனை அமோகமாக இருந்தது. இதனால், இந்த ஆண்டு மதுபான விற்பனை ரூ.500 கோடியை தாண்டும் என டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது, கடந்த ஆண்டு விற்பனையை விட 10 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பொங்கல் பொங்குச்சோ...இல்லியோ நம்ம டாஸ்மாக்கை கலெக்சனில் பொங்க வைச்சுட்டாங்க பாஸ்...


நண்பர்களுடன் பகிர :