தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த தனி ஒருவன்... இன்னமும் முடியவில்லை தீண்டாமைக் கொடுமை..! Description: தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த தனி ஒருவன்... இன்னமும் முடியவில்லை தீண்டாமைக் கொடுமை..!

தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த தனி ஒருவன்... இன்னமும் முடியவில்லை தீண்டாமைக் கொடுமை..!


தாயை சைக்கிளில் சுமந்து அடக்கம் செய்த தனி ஒருவன்... இன்னமும் முடியவில்லை தீண்டாமைக் கொடுமை..!

‘’தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’’ என பள்ளிக் காலத்தில் படித்திருக்கிறோம். அப்போதெல்லாம் அதை ஆழமாக மனதில் பதிய வைத்துவிட்டு வளர்ந்த பின் லாவகமாக மறந்து விடுவது கொடுமையிலும், கொடுமை. அப்படியொரு கொடுமையால் ஒடிசாவில் நடந்த துயரச் சம்பவம் இது!

ஒடிசா மாநிலம் கர்பாபகல் கிராமத்தைச் சேர்ந்தவர்ஜானகி சின்ஹானியா(45) கணவனை இழந்த இவர் தன் மகன் சரோஜ், மற்றும் மகளுடன் வசித்து வந்தார். சரோஜ்க்கு 17 வயதே ஆகிறது. தண்ணீர் எடுக்க போன போது தவறி விழுந்த ஜானகி சின்ஹானியா உயிர் இழந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பான்மை சமூகம் இல்லை என்பதால் அக்கம், பக்கத்தில் யாரும் உதவிக்கு வரவில்லை.

இதனால் மிகுந்த வேதனையடைந்த சரோஜ் தன் சைக்கிளில் இருபக்கமும் இரண்டு கம்பிகளை வைத்து, அதன் மேல் மரக்கட்டையை வைத்து அதன் மேல் தன் தாயின் உடலை போட்டு, மேலே வீட்டில் இருந்த பெட்சீட்டை போட்டு மூடி அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடுகாட்டுக்கு போய் தனி ஒருவனாக அடக்கம் செய்து திரும்பியுள்ளார் சரோஜ்...

மக்களின் மனதில் புரையோடிக் கிடக்கும் சாதியை எந்த தனி ஒருவன் வந்து அடக்கம் செய்யப் போகிறார் என்பதே சமூக ஆர்வலர்களின் கேள்வி.


நண்பர்களுடன் பகிர :