எம்.ஜி.ஆர் ஏன் இன்னும் போற்றப்படுகிறார் தெரியுமா? இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்புப் பதிவு. Description: எம்.ஜி.ஆர் ஏன் இன்னும் போற்றப்படுகிறார் தெரியுமா? இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.

எம்.ஜி.ஆர் ஏன் இன்னும் போற்றப்படுகிறார் தெரியுமா? இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.


எம்.ஜி.ஆர் ஏன் இன்னும் போற்றப்படுகிறார் தெரியுமா? இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள் சிறப்புப் பதிவு.

அவரது ரசிகர்களையும் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் புரட்சித் தலைவர் என்று கொண்டாடப்பட்டவர் அமரர் எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே ஆட்சியையும் பிடித்த எம்.ஜி.ஆர் தான் உயிரோடு இருந்தவரை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்த பெருமைக்கும் சொந்தக்காரர்.

மக்கள் இந்த அளவுக்கு கொண்டாட என்ன செய்தார் எம்.ஜி.ஆர்? அவர் வாழ்வு, சாதனையோடு ஒப்பிடும் போது இது சிறிய பதிவே. ’’மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் என்பதன் சுருக்கமே எம்.ஜி.ஆர். தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்து வந்த போது, அன்றையகால மாணவர்கள் மீது அப்போதைய காங்கிரஸ் அரசு தடியடி நடத்தியது. இதைக் கண்டித்து மத்திய அரசு தனக்கு அளித்த பத்ம ஸ்ரீ விருதை திருப்பிக் கொடுத்த பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு.

காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டமாக்கினார். அது நடந்ததே ஒரு சுவாரஸ்ய சம்பவம் தான். தூத்துக்குடி பக்கம் ஒருகிராமத்தில் எம்.ஜி.ஆர் காரைப் பார்த்து பெண்கள் சிலர் மடக்கினர். அவர்கள் கையில் குழந்தைகள் இருந்தனர். எல்லாரும் சாப்பிட்டீங்களா? என பரிவாய்க் கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு வயல் வேலை முடிந்து இரவில் வீட்டுக்குப் போய் சாப்பிடுவோம் எனச் சொல்ல அன்று சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆரால் மலர்ந்ததே சத்துணவுத் திட்டம்.

136 படங்களில் மொத்தம் எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ரசிகர்கள் ‘வாத்தியார்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்தனர். ‘நம் நாடு’ திரைப்படத்தில் ஜெயலலிதாவும், கிராம மக்களும் சேர்ந்து ஆடி எம்.ஜி.ஆரை வரவேற்கும், ‘’வாங்கய்யா வாத்தியாரய்யா...”பாடல் ஒலிக்காத பட்டி, தொட்டியே கிடையாது.எம்.ஜி.ஆர் நடித்த மலைக்கள்ளன் திரைப்படம் தமிழின் முதல் ஜனாதிபதி விருது பெற்ற படம். தனது இறப்புக்கு பின்னர் தான் வாழ்ந்த இராபபுரம் தோட்ட இல்லத்தை காது கேளோதோர் பள்ளிக்கு எழுதி வைத்த பெருமையும் எம்.ஜி.ஆருக்கு உண்டு.
சத்துணவு திட்டத்தில் மாநிலம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயா பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அவர்களுக்கு மாதம் நூறு ரூபாய் சம்பளம் கிடைக்க வழி செய்யப்பட்டது. பள்ளிக் கல்வியின் வளர்ச்சிக்கு இலவசமாக சீருடை, பாடநூல், பற்பொடி, காலணி என வழங்கியதும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் உதயமானது.நலிந்தோருக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் பல திட்டங்களைக் கொடுத்தார்.

ஏழைப் பங்காளன் என்பதை இப்படி சுருக்கமாய் சொல்லலாம். அப்போதெல்லாம் மோட்டார் சைக்கிள், கார் எல்லாம் வசதியானவர்களிடம் மட்டுமே இருக்கும். ஏழைகளின் வாகனம் சைக்கிள் தான். அந்த சைக்கிளில் டபுள்ஸ் செல்வதற்கு, அதாவது பின்னால் ஆள் வைத்து ஓட்டுவதற்கு தடை இருந்தது. அந்த தடையை உடைத்து சைக்கிளில் டபுள்ஸ் செல்லலாம் என்னும் சட்டத்தை கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர் தான். நடிகராக, அரசியல்வாதியாக அவர் எப்போதுமே உச்சத்தில் இருந்தாலும், எளிய மக்களைப் பற்றியே சிந்தித்ததால் தான் இன்றும் நினைவு கூறப்படுகிறார்.


நண்பர்களுடன் பகிர :