ரயில்களின் வாசலில் இனி நீல நிற விளக்குகள் ஓடும் ரயிலில் விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா... Description: ரயில்களின் வாசலில் இனி நீல நிற விளக்குகள் ஓடும் ரயிலில் விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா...

ரயில்களின் வாசலில் இனி நீல நிற விளக்குகள் ஓடும் ரயிலில் விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா...


ரயில்களின் வாசலில் இனி நீல நிற விளக்குகள் ஓடும் ரயிலில் விபத்தை தடுக்க சூப்பர் ஐடியா...

‘’சிக்கு புக்கு...சிக்கு புக்கு” வென சீறிப் பாயும் ரயில் என்றால் குழந்தைகள் முதல் பெரொயவர்கள் வரை அனைவருக்குமே கொண்டாட்டமான ஒன்று தான்.

அதே நேரம் பல நேரங்களில் ரயில் விபத்துகள் நம் மனதை பட,படக்க வைத்து விடுகின்றன. அதிலும் குறிப்பாக பெருநகரங்களில் வாழ்வியல் ஓட்டம், துரிதத்தில் ஓடும் மின்சார ரயிலில் துள்ளி ஏறி கீழே விழுந்து வாழ்வை தொலைத்தவர்களை நினைக்கையில் நெஞ்சம் பதறும். அதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்க சூப்பர் ப்ளான் ஒன்றை கையில் எடுத்துள்ளது ரயில்வே துறை. முதல் கட்டமாக இந்த திட்டம் மும்பையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.

இதில் மின்சார ரயில்களின் கதவுகளில் நீல நிற விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த விளக்குகள் ரயில் ஒரு குறிப்பிட்ட வேகத்தை பிடிக்கும் போது ஒளிரத் துவங்கும். இது ஒளித்தால் பயணிகள் ரயிலில் ஏறுவதோ, இறங்குவதோ உயிருக்கு ஆபத்தானது என்று அர்த்தம். இதைப் பார்க்கும் பயணிகளுக்கு உணர்வுப்பூர்வமாக ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இதனால் ஓடும் ரயிலில் ஏறி, இறங்குவதற்கான தூண்டுதல் குறையும் என்கிறது ரயில்வே நிர்வாகம்.

சீக்கிரமே நம்ம சிங்காரச் சென்னையின் எலெட்ரிக் ரயில்களிலும் இந்த முறை வந்துடுச்சுன்னா, செம சேப் ஜார்னி தானே?


நண்பர்களுடன் பகிர :