இரத்த ஓட்டத்தை சீராக்க இனி இதை சாப்பிடுங்க... Description: இரத்த ஓட்டத்தை சீராக்க இனி இதை சாப்பிடுங்க...

இரத்த ஓட்டத்தை சீராக்க இனி இதை சாப்பிடுங்க...


 இரத்த ஓட்டத்தை சீராக்க இனி இதை சாப்பிடுங்க...

உணவே மருந்து என்பது பழமொழி. நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நமது உடல் நலனை கெடுப்பதிலும் நாம் உண்ணும் உணவுக்கு முக்கியப்பங்கு உண்டு. அந்த வகையில் நாம் உண்ணும் உணவில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும்.

இப்போது அதில் சில உணவுகளின் அதி நன்மைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது.அதில் முக்கியமானது நமது ரத்த ஓட்டத்தை சீராக்குவதிலும் இஞ்சிக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. ‘இஞ்சி தின்ன குரங்கு போன்று’ என முகத்தை உரு, உருவென வைத்திருப்பவர்களுக்கு உதாரணமாக சொல்வார்கள். அப்படி நான்கு பேர் சொன்னாலும் பரவாயில்லை இனி உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சல்பர் அதிகம் நிறைந்த பூண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது.இவற்றில் உள்ள அல்லிசின் என்னும் முக்கிய மூலப்பொருள் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.உடலில் ரத்த கட்டி இருந்தால் அதையும் இது சீராக்கும். பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் நன்கு ரத்தம் சுரக்கும் அதேபோன்று ரத்த ஓட்டத்தையும் இது சீராக்கும். இதிலுள்ள நைட்ரைட் நைட்ரிக் ஆக்சிடாக மாறி ரத்த நாளங்களின் செயல் திறனை அதிகரிக்கும்.

இதேபோல் மாதுளைக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும் ஆற்றல் உண்டு.ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் இதில் அதிகம் உள்ளதால் தசைகளின் திசுக்களை வேகப்படுத்தி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். தினம் ஒரு மாதுளையை உணவில் சேர்த்துக்கொள்ள ரத்த ஓட்டம் சீராகும்.


நண்பர்களுடன் பகிர :