சட்டத்தை மதிக்கும் தல...போலீஷ் உயர் அதிகாரி பாராட்டு... தல ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அசத்தல்..! Description: சட்டத்தை மதிக்கும் தல...போலீஷ் உயர் அதிகாரி பாராட்டு... தல ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அசத்தல்..!

சட்டத்தை மதிக்கும் தல...போலீஷ் உயர் அதிகாரி பாராட்டு... தல ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அசத்தல்..!


சட்டத்தை மதிக்கும் தல...போலீஷ் உயர் அதிகாரி பாராட்டு...  தல ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அசத்தல்..!

அல்ட்மேட் ஸ்டார் அஜித், சிவா கூட்டணியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விஸ்வாசம். தந்தை, மகள் உறவை மையப்படுத்தி வந்திருக்கும் இப்படம் பி.சி சென்டர்களில் சக்கைபோடு போட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் நீண்ட காலத்துக்கு பின்பு திரையரங்கம் நோக்கி வருகின்றனர்





இந்நிலையில் சென்னை மாநகர தலைமையிடத்து காவல் துணை ஆணையர் சரவணன் விஸ்வாசம் குறித்து தனது சமூகவலைதளத்தில் பதிவு ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘’சமீபத்தில் வெளியான நடிகர் அஜீத்குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.





கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.





இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித்குமார் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜீத்குமார் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள் " என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரியின் சர்டிபிகேட்டால் உச்சி குளிர்ந்து உள்ளனர் தல ரசிகர்கள்!


நண்பர்களுடன் பகிர :