ஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்.. Description: ஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்..

ஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்..


 ஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய்...அசரவைத்த அமேசான்..

என்ன தலைப்பை பார்த்த உடன் தலைசுற்றுகிறதா? உண்மையிலேயே அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு அரச வைத்துள்ளது அமேசான் நிறுவனம்.

முன்பெல்லாம் மக்கள் வணிகப் பொருள்களை வாங்குவதற்கு தங்கள் ஊரில் உள்ள கடைகளுக்குத் தான் சென்று வந்தனர். ஆனால் இப்போதெல்லாம் பொருள்கள் வாங்கவும் இணையமே சரணாகதியாய் இருக்கின்றனர். அதிலும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நாம் பணம் செலுத்திவிட்டால் வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் அமேசான் நிறுவனம் இப்போது விளம்பரப்படுத்தியுள்ள பொருள் ஒன்று இணையத்தில் செம குசும்பாக பகிரப்பட்டு வருகிறது. நமது வீடுகளில் சட்னிக்கு தேங்காயை அரைத்துவிட்டு, கொட்டாங்குச்சியை தூக்கி வீசுவோம் அல்லவா? அந்த கொட்டாக்குச்சி ஒன்றை 3000 ரூபாய் என விலை வைத்து வெளியிட்டுள்ளது.

அதுவும் இப்போது 55 சதவிகித சலுகையில் ஒற்றைக் கொட்டாங்குச்சியை 1365 ரூபாய்க்கு கொடுக்கிறது. இதன் மூலம் 1635 ரூபாயை மிச்சம் பிடிக்கலாம் என்றும் கவர்ச்சி கரமாக அறிவித்துள்ளது அமேசான். நம் பாரம்பர்யத்தின் முக்கியத்துவம் இணையத்தில் பொருள் விற்கும் அமேசானுக்குத் தெரிகிறது. ஆனால் அதன் முக்கியத்துவமே தெரியாமல் கொட்டாங்குச்சியை உதாசீனப்படுத்தி தூக்கி வீசும் நமக்குத் தெரியவில்லை.

ஆனாலும் ஒரு கொட்டாங்குச்சி 3000 ரூபாய் என்பதெல்லாம்ஒன்.. டூ...த்ரீ..போர்...பைலாம் தாண்டுன மச் தானே மச்சீஸ்?


நண்பர்களுடன் பகிர :