திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க... Description: திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...

திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...


 திருமண பந்தியில் மாப்பிள்ளை செய்த வேலையை பாருங்க...

‘’திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது.”என்பார்கள். ’’மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல” என வசீகரா திரைப்படத்தில் வரும் பாடல் திருமணம், உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும்.

அதனால் தான் நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிர் என்று சொன்னார்கள். திருமணம் என்பது வெறுமனே இரு மனங்கள் இணையும் விழா அல்ல. இரு குடும்பங்களின் சங்கமம். இரு தரப்பட்ட வாழ்சூழலின் புகழிடம். அந்த வகையில் கேரளத்தில் அப்படியொரு உத்சவம் நடந்த போது, மாப்பிள்ளை செய்த காரியம் தெரியுமா?

திருமணம் முடிந்ததும் மணமக்கள் சாப்பிட ஒன்றாக அமர்ந்தனர். பந்தியில் அவர்களுக்கு நீளமான ஒரே தலை வாழை போடப்பட்டது. மணப்பெண்ணும், மணமகனும் ஒரே இலையில் சாப்பிட வேண்டும் என்பது நியதி. அப்போது மணமகனின் பக்கத்தில் சோறு போடப்பட்டது. உடனே மணமகள் தமாஷாக முழுச் சோற்றையும் தன் பக்கம் இழுத்து வைத்துக் கொள்கிறார். இதைப் பார்த்ததும் மணமகனின் நண்பர்கள் ‘’இப்போ எப்படி சாப்பிடுவ?”ன்னு மணமகனை கேலி செய்கிறார்கள். கண் இமைக்கும் நொடியில் சாப்பாட்டு டேபிளையே தூக்கி வீசிவிட்டு மணமகன் எழுந்து செல்லும் வீடீயோ வைரலாகி வருகிறது.

செய்வது அறியாது மணப்பெண் திரு,திருவென முழிக்க, இன்றைய இளைஞர்களுக்கு பண்புசார் பயிற்சியும்தேவை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


நண்பர்களுடன் பகிர :