பொங்கலில் கரும்புக்கு முக்கியத்துவம் வந்தது ஏன் தெரியுமா? Description: பொங்கலில் கரும்புக்கு முக்கியத்துவம் வந்தது ஏன் தெரியுமா?

பொங்கலில் கரும்புக்கு முக்கியத்துவம் வந்தது ஏன் தெரியுமா?


பொங்கலில் கரும்புக்கு முக்கியத்துவம் வந்தது ஏன் தெரியுமா?

கரும்பு இல்லாமல் பொங்கல் முழுமை பெறாது என்றே சொல்லலாம். பொங்கல் காலத்துக்கும் ஒரு மாதங்களுக்கு முன்பே வீதியெங்கும் கரும்பு கடைகள் முளைத்துவிடும். கரும்பு இல்லாமல் பொங்கல் இல்லை.

ஆனால் நடப்பு ஆண்டில் கஜா புயல் பாதிப்பினால் பல இடங்களிலும் வழக்கம் போல் கரும்பு விளைச்சல் இல்லை. இதனால் இந்த பொங்கலுக்கு கரும்பு விலை கொஞ்சம் ஜாஸ்தி தான்.

அதெல்லாம் ஒகே....இந்த பொங்கலில் கரும்புக்கு முக்கியத்துவம் எப்படி வந்தது தெரியுமா? விவசாயம் செழிக்க வைக்கும் பொங்கல் மூலம் குடும்பமும் செழிக்கட்டும் என்னும் குறியீடாகத்தான் கரும்பை வைக்கின்றனர். குடும்பம் தளைப்பதற்கும், கரும்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

கரும்பு உயிர் அணுக்களை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றது. இதனால் ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மருத்துவப் பொருளாக செயல்படும். அதேநேரம் சுவைமிக்க இனிப்பு பொருளாகவும் செயல்படும். கரும்பை கடித்து தின்றால் ஈறும், பல்லும் உறுதியாகும்.

இப்போது தெரிகிறதா? மன்மதன் கையில் கரும்பால் செய்யப்பட்ட வில் ஏன் இருக்கிறது என்று?


நண்பர்களுடன் பகிர :