வாரே வாவ்... விபத்தைத் தடுக்க வந்தாச்சு ஸ்மார்ட் மூக்குகண்ணாடி..! Description: வாரே வாவ்... விபத்தைத் தடுக்க வந்தாச்சு ஸ்மார்ட் மூக்குகண்ணாடி..!

வாரே வாவ்... விபத்தைத் தடுக்க வந்தாச்சு ஸ்மார்ட் மூக்குகண்ணாடி..!


வாரே வாவ்... விபத்தைத் தடுக்க வந்தாச்சு ஸ்மார்ட் மூக்குகண்ணாடி..!

வாவ் போட்டு வரவேற்கும் அளவுக்கு இதில் என்ன இருக்கிறது என்று தோன்றுகிறதா? மேலே படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

பொதுவாக நம்மூரு நெடுஞ்சாலைகளில் நடக்கும் பெரும்பான்மையான விபத்துகளுக்கு ஓட்டுனர்கள் பயணக்களைப்பில், அசதியில் தூங்குவது தான் காரணமாக இருக்கிறது. அதற்கு பிரான்ஸைச் சேர்ந்த ‘எல்லைஸ்’ என்ற நிறுவனம் ஸ்மார் மூக்கு கண்ணாடியை வடிமைத்துள்ளது.

ஓட்டுனருக்கு தூக்கம், சோர்வு என எட்டிப் பார்த்தால் இந்த கண்ணாடி நமக்கு எச்சரிக்கை செய்யும். இதற்கென இந்த கண்ணாடியில் 15 வகை சென்சார்கள் வைக்கப்பட்டுள்ளன.

இது ஓட்டுனரின் தலை அசைவு, கொட்டாவி விடுவது என அத்தனையையும் உள்வாங்கி சிறிய வெளிச்சம் மற்றும் ஒலியின் மூலம் இது எச்சரிக்கும். இந்த ஸ்மார்ட் எல்லைஸ் கண்ணாடியின் விலை இந்திய மதிப்பில் 17 ஆயிரம் ரூபாய்

விலை அதிகம் தான் என்றாலும், உயிர் பாதுகாப்பைக் கருதி வயோதிக வாகன ஓட்டிகளும், நீண்டதூரம் செல்வோரும் வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்பி தயாரித்துள்ளது பிரான்ஸ் நாட்டு நிறுவனம்!


நண்பர்களுடன் பகிர :