குழந்தைகள் விரும்பும் பார்பி பொம்மை...வரலாறு தெரியுமா? Description: குழந்தைகள் விரும்பும் பார்பி பொம்மை...வரலாறு தெரியுமா?

குழந்தைகள் விரும்பும் பார்பி பொம்மை...வரலாறு தெரியுமா?


குழந்தைகள் விரும்பும் பார்பி பொம்மை...வரலாறு தெரியுமா?

பெண் குழந்தைகளின் விருப்பப் பட்டியலில் பார்பி பொம்மைக்கு முக்கிய இடம் உடண்டு. ரூத் ஹேண்டிலர் என்ற பெண் வியாபாரி தான் இதை முதன்முதலில் வடிவமைத்தார்.

இவரது கணவர் மாட்டில் என்னும் பொம்மை தயாரிப்பு நிறுவனத்தில் பணி செய்தார். அந்த பெண் ஜெர்மனி நாட்டுக்கு சென்று இருந்தபோது "பிலிட் லில்லி" என்ற பொம்மை வாங்கினார். அதை அடிப்படையாக கொண்டு இவர் தயாரித்த பார்பி பொம்மைகள் தயாரித்த முதல் ஆண்டில் மட்டும் மூன்றரை லட்சம் பொம்மைகள் விற்றது.

இதனைக் கவனித்த பார்பியின் முன்னோடித் தயாரிப்பான பிளட் லில்லி நிறுவனம் தங்களது பிலிட் லில்லியை காப்பி அடித்து செய்ததாக மாட்டில் நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்தது. நஷ்ட ஈடாக் 20 லட்சம் கொடுத்து விட்டு தயாரிப்பில் தீவிரம் செலுத்தியது மாட்டில் நிறுவனம்.

இன்று உலகில் நூறுக்கும் அதிகமான நாடுகளில் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமான பார்பி பொம்மைகள் விற்பனை ஆகிறது. இந்த பார்பி பொம்மைகள் வரும் மார்ச் 9ம் தேதி தனது 60 வயதில் அடி எடுத்து வைக்கின்றன. உலகம் முழுவதும் தபால் தலை, நாணயங்கள் சேகரிப்போருக்கு இணையாக பார்பி பொம்மை சேகரிப்போரும் உள்ளனர். சரி நீங்க விளையாடிய பார்பி பொம்மை நினைவில் இருக்கா?


நண்பர்களுடன் பகிர :