காணாமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்... Description: காணாமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...

காணாமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...


காணாமல் போன பொங்கல் வாழ்த்து அட்டைகள்...

தமிழ், தமிழர் கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்வான பொங்கலுக்கு முன்பெல்லாம் நண்பர்கள், உறவினர்கள் அனுப்பி வைக்கும் வாழ்த்து அட்டைகள் இன்று வழக்கத்தில் இல்லாமல் போய் விட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலத்தை கடிதப் போக்குவரத்தின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்த காலத்தில் பொங்கல், தீபாவளி என விசேச காலங்களில் நண்பர்கள் தங்களுக்குள் வாழ்த்து அட்டைகளை அனுப்பி வாழ்த்துவது வழக்கம்.

இது வாழ்த்து அட்டை விற்பனையகம், ஷ்டாம்ப் ஒட்டி அனுப்புவதால் தபால் துறை என பலருக்கும் வருமானம் வந்து வந்தது. மேலும் பொங்கல் காலத்தையொட்டி வீட்டுக்கு தபால்காரர் வருவதும், வாழ்த்து கடிதத்தை கொடுப்பதும் மகிழ்ச்சிக்கு உரியதாக இருந்த்து.

காலப்போக்கில் செல்போன் பயன்பாடு பெருகியதில் மக்கள் தங்களது வாழ்த்துகள் தகவை மெசேஜ் மூலம் அனுப்பினர். துவக்கத்தில் இதை இலவசமாகக் கொடுத்த செல்போன் நிறுவனங்கள் காலப்போக்கில் பண்டிகை காலங்களில் அனுப்பப்படும் மெசேஜ்க்கு கட்டணம் நிர்ணயித்தது.

இப்போது இணைய பயன்பாடுகள் பெருகி உள்ள நிலையில் மக்கள் செல்போன் மெசேஜையும் கைவிட்டு விட்டனர். இப்போது வாட்ஷ் அப், முகநூல் மூலம் வாழ்த்து பரிமாறிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனாலும் பாரம்பர்யமான நம் பொங்கலுக்கு கடித வழியில் வாழ்த்து சொன்ன அன்றைய காலம் பொற் காலம் தான்...


நண்பர்களுடன் பகிர :