சிங்கப்பூர் போனாலும் அம்மா எப்பவும் அம்மா தானே! மிளகாய் வத்தல் காய வைத்து பக்கத்திலேயே படுத்த தாய் Description: சிங்கப்பூர் போனாலும் அம்மா எப்பவும் அம்மா தானே! மிளகாய் வத்தல் காய வைத்து பக்கத்திலேயே படுத்த தாய்

சிங்கப்பூர் போனாலும் அம்மா எப்பவும் அம்மா தானே! மிளகாய் வத்தல் காய வைத்து பக்கத்திலேயே படுத்த தாய்


சிங்கப்பூர் போனாலும் அம்மா எப்பவும் அம்மா தானே! மிளகாய் வத்தல் காய வைத்து பக்கத்திலேயே படுத்த தாய்

அம்மா என்பது வெறும் வார்த்தையல்ல. அம்மா ஒரு உணர்வு. அம்மா என்றால் அன்பு, பாசம். அதனால் தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்னும் வரிசையில் தெய்வத்துக்கே நான்காவது இடத்தை கொடுத்த நம் முன்னோர்கள் அன்னைக்கு முதலிடம் கொடுத்தனர். அப்படிப்பட்ட அன்னை ஒருவரைப் பற்றிய நெஞ்சுருக்கும் செய்தி தான் இது!

இந்தியாவினுடைய முதுகெழும்பே கிராமங்கள் தான். ஒருகாலத்தில் விவசாயம் மட்டுமே கிராமங்களின் முகமாகவும், தொழிலாகவும் இருந்தது.காலப்போக்கில் பருவநிலை மாற்றத்தால் மழை பொய்த்து, விவசாயம் கேள்விக்குறியாக பலரும் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு படையெடுத்தனர். அடுத்தடுத்து வந்த தலைமுறையினரும் படித்து சென்னைக்கு சென்று விட, இப்போதும் பிள்ளைகளின் வீட்டுக்கு மாதத்துக்கு ஒருமுறை வத்தல் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி என வீட்டில் அரைத்து கொண்டு செல்லும் தாய்மார்கள் பலரை பெருநகரங்கள் பார்த்திருக்கின்றன.

அப்படித்தான் இங்கும் ஒரு தாய். சிங்கப்பூரில் இருக்கும் தன் மகனைப் பார்க்க முதன் முதலாக விமானம் ஏறிச் சென்றார். அந்த தாய் தன் மகனுக்காக மிளகாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து அதன் பக்கத்திலேயே காவலுக்கு நீட்டி முழங்கி படுத்தார். பயண அயற்சியில் தூங்கியும் விட்டார்.

இதுகுறித்து ரகுவசந்தன் என்னும் சிங்கப்பூரில் வாழும் தமிழர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார். அதில், ‘’இந்தியாவிலிருந்து யாரோ ஒரு நண்பர் சிங்கப்பூருக்கு அம்மாவை அழைத்து வந்திருக்கிறார். இங்குள்ள விதிமுறைகள் சட்டதிட்டங்கள் பற்றி கூறாமல் உள்ளார் போல.

அந்தம்மா மிளாய், மல்லி, மஞ்சள் என மசாலா பொருள்களை நடைபாதையில் காயவைத்து படுத்துள்ளார். இதை உள்ளூர்வாசிகள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். பார்க்க கொஞ்சம் மனது கஷ்டமானது. பெற்றோரை வரவழைக்கும்போது இதுபோன்ற செயல்களை தவிர்க்க அறிவுருந்துங்கள். பணத்தைக் கொடுத்து பொருளை வாங்கித் திண்ணும் நெட்டிசன்களுக்கு வயலில் விளைந்ததை பிள்ளைகளுக்காக பொட்டலம்கட்டி வானூர்தியில் கொண்டு வந்து, அதை வெயில் உலர்த்தி தேக்காவில் உள்ள மில்லில் அரைத்துக் கொண்டு வந்து பிள்ளைகளுக்கு சமைக்க எண்ணிய தாய் அன்பு ஏளனம் செய்து பதிவிடும் உயர்தட்டு கணினி உலக நண்பர்களுக்கு புரியாது. உழவை அறியாத பூமி, அறியாமையை ஏளனம் செய்வது வேதனை.”என பதிவிட்டுள்ளார்.

தாய்ப்பாசம் கொண்ட ஒவ்வொருவரையும் உருக வைத்து விட்டது இந்த பதிவு. அம்மாக்களுக்கு சிங்கப்பூராக இருந்தாலும், தன் பிள்ளையின் வீடு தானே?


நண்பர்களுடன் பகிர :

S
Shanti 1வருடத்திற்கு முன்
Amma amma daann no doubt Ippadi resolution irukirada amma kita choli irunda amma ku purinchi irukumo apdi cheiyadathu maganin thappu magan cheida thavarai daan sutikatyiullanar amma va illai deep pa yosicha putiyum endru ninaikiren Ungsluku siriya question flight la pogum bodu window open panni vechika mudiuma ada purinchikira ammaku ida purinchika mudiyada so magan thavarai thirutjkaum This is an awarness post why u took this seroisly