அரசவைத்த வெள்ளந்தி மனிதரின் ஒருவரிப் பதில்... பெண் நிருபரையே சிரிக்க வைத்த நெல்லைக்காரர்..! Description: அரசவைத்த வெள்ளந்தி மனிதரின் ஒருவரிப் பதில்... பெண் நிருபரையே சிரிக்க வைத்த நெல்லைக்காரர்..!

அரசவைத்த வெள்ளந்தி மனிதரின் ஒருவரிப் பதில்... பெண் நிருபரையே சிரிக்க வைத்த நெல்லைக்காரர்..!


அரசவைத்த வெள்ளந்தி மனிதரின் ஒருவரிப் பதில்...   பெண்  நிருபரையே சிரிக்க வைத்த நெல்லைக்காரர்..!

திருநெல்வேலியில் தனியார் வானொலி ஒன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதில் வாங்கிப் போட்டது. அதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தோரின் வாட்ஸ் அப் குழுக்களில் அதிக அளவில் வைரல் ஆகி வருகிறது.

திருநெல்வேலியில் இயங்கி வரும் தனியார் பண்பலை நெல்லையில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி குற்றச்செயல்களை குறைக்கும் வகையில் வணிகர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோரிடம் நேரடியாகச் சென்று கருத்து கேட்டது.

அப்போது நெல்லையில் வணிக நிறுவனம் ஒன்றுக்கு சென்ற வானொலியின் பெண் தொகுப்பாளர், ஒருவரிடம் ‘’நெல்லையில் தற்போது தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதை நியூஸ் பேப்பரிலும் பார்க்கிறோம். இந்த திருட்டை ஒழிக்க உங்க சைட்ல இருந்து ஐடியா கேட்டால் என்ன ஐடியா கொடுப்பீங்க?” என்று கேட்கிறார். உடனே அந்த நெல்லைச் சீமையின் வெள்ளந்தி மனிதர் ஒருநொடிக் கூட யோசிக்காமல்,’’ ஐடியா கொடுக்கணும்ன்னா என்ன செய்ய முடியும்? கவர்மெண்டே திடுடிகிட்டுத் தான் இருக்கு...” என வெள்ளந்தியாய் சொல்ல பெண் ஊடகவியலாளர் உள்பட அனைவரது முக ரியாக்ஸனையும் வீடியோவில் பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :