பெண்கள், பெண்குழந்தைகளுடன் குடும்பம்,குடும்பமாக தியேட்டர்களில் வந்து கொண்டாடும் விஸ்வாசம் படம்..! Description: பெண்கள், பெண்குழந்தைகளுடன் குடும்பம்,குடும்பமாக தியேட்டர்களில் வந்து கொண்டாடும் விஸ்வாசம் படம்..!

பெண்கள், பெண்குழந்தைகளுடன் குடும்பம்,குடும்பமாக தியேட்டர்களில் வந்து கொண்டாடும் விஸ்வாசம் படம்..!


பெண்கள், பெண்குழந்தைகளுடன் குடும்பம்,குடும்பமாக தியேட்டர்களில் வந்து கொண்டாடும் விஸ்வாசம் படம்..!

நடிகர் அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் தான் விஸ்வாசம். இப்படம் கடந்த 10 தேதி வெளியாகி திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

பெற்றோர்கள் பிள்ளைகளை ஆசைக்கு வளர்க்காமல். பிள்ளைகளின் விருப்பப்படி அவர்களை வளர விடவேண்டும் என்ற மைய கருத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளதால் பேமிலி ஆடியன்ஸ்களை ஈர்த்துள்ளது.

மேலும் தல ரசிகர்களை குஷிப்படுத்தவும், பேமிலி ஆடியன்ஸை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தல மட்டுமல்ல, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார், அதுவும் அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான அன்பு என அனைவரையும் ரசிக்கும் படி அருமையாக நடித்திருக்கிறார்.

நல்லக் குடும்பபாங்கான கதையை நிம்மதியாக குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் அருவருக்கத்தக்க இரட்டை வசனங்ள் கிடையாது, காதல் காட்சிகள் இருக்கின்றது ஆனால் ஆபாச காட்சிகள் இல்லை, அனைவரும் விரும்பும்படி மிரட்ட வைக்கும் சண்டை காட்சிகள் இருக்கிறது ஆனால், இரத்தம் தெறிக்கும் வன்முறைக்கு காட்சிகள் இல்லை. நல்ல குடும்ப படமாக எடுத்திருப்பதால் குடும்பம் குடும்பமாக திரையரங்கை நோக்கி படையெடுக்கிறார்கள் குடும்பங்கள். அதுவும் பெண்களும், பெண் குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக வந்து திரைப்படத்தினை பார்த்து வருகின்றனர். இதுவே இப்படத்தின் வெற்றி என்றும் சொல்லிவிடலாம்.

பொதுவாக தல படம் வெளியானால் எப்படியும் ஒருவாரமாவது ரசிகர்கள் திரை அரங்கை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். ஆனால் படம் இறங்கி இரண்டாவது நாளிலேயே குடும்பங்களை திரையரங்கில் வரவழைத்தது சிவாவின் மற்றும் தல செண்டிமெண்ட் மேஜிக் என்று தான் சொல்ல வேண்டும்.


நண்பர்களுடன் பகிர :

Y
Yuvaraj 1வருடத்திற்கு முன்
அருமை